
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, கரூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, இதில் கலந்து கொண்டு பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கூறியதாவது:
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட நிலையான ஆட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
புதிய இயக்கங்களை யார் துவங்கினாலும், மக்கள் அதிமுக பக்கம் இருகிறார்கள்.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்றப் போவதாக கூறும் தீபா அ.தி.மு.க.வின் உறுப்பினராக கூட இல்லை.