பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. இந்த மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு..!

By vinoth kumarFirst Published Jun 16, 2021, 9:40 AM IST
Highlights

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருவதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் கடந்த ஜூன் 11-ம் தேதி 27 மாவட்டங்களில்  டாஸ்டாக், சலூன், பூங்கா உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்கு குறிப்பிட்ட சிலவற்றிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீதம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேருந்துகள் மாவட்டத்திற்குள்ளேயே இயங்கும் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!