மழை வந்தாகூட ஒதுங்க வீடு இல்லைங்கய்யா.. மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த வைரல் பாட்டி..!

By Asianet Tamil  |  First Published Jun 15, 2021, 10:21 PM IST

ரூ.2 ஆயிரம் நிதியுடனும் வெடிச் சிரிப்புடனும் சமூக ஊடங்களில் வைரலான நாகர்கோவில் பாட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 


தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ரூ.2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் இன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த பாட்டி ஒருவர் ரூ.2 ஆயிரம் பணமும் மளிகைப் பொருட்களும் வாங்கிய மகிழ்ச்சி பிரவாகத்தில் சிரித்த சிரிப்பு புகைப்படம் சமூக ஊடங்களில் வைரலானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் அந்தப் புகைப் படத்தை தங்கள் சமூக ஊடகப் பக்களில் பகிர்ந்து, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாக’ எழுதியிருந்தனர்.


இந்நிலையில் அந்தப் பாட்டியின் பெயர் வேலம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அட்டகாசமான ஒற்றைச் சிரிப்பில் வைரலான அந்தப் பாட்டி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். “கொரோனாவுக்கு 2 ஆயிரம் கொடுத்த ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி. வீடு இல்லாமல் கஷ்டப்படுறேன். மழை வந்தாகூட ஒதுங்க முடியாதுங்கய்யா. வேலை இல்லைங்கய்யா. ரொம்ப கஷ்டப்படுறேன் அய்யா. வந்து பாருங்க அய்யா.” என்று தன் நிலை குறித்து தெரிவித்து கோரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாளில் வைரலான நாகர்கோவில் பாட்டியின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?   

Latest Videos

click me!