கட்சிக்காகக் குரல் கொடுத்த புகழேந்தியை நீக்குவதா..? எடப்பாடி பழனிச்சாமியை வெறுப்பேற்றும் சசிகலா..!

Published : Jun 15, 2021, 09:15 PM IST
கட்சிக்காகக் குரல் கொடுத்த புகழேந்தியை நீக்குவதா..? எடப்பாடி பழனிச்சாமியை வெறுப்பேற்றும் சசிகலா..!

சுருக்கம்

கட்சிக்காகக் குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது என்று சசிகலா  தெரிவித்துள்ளார்.  

சசிகலாவுடன் அதிமுக தொண்டர்களுடம் பேசும் ஆடியோக்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் முன்னாள் எம்.பி. உள்பட 16 பேர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நேற்று நீக்கப்பட்டனர். இந்நிலையில், மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் சசிகலா பேசிய ஆடியோ வெளியானது. 
அப்போது பேசிய சசிகலா, “கட்சிக்காரர்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள். தொண்டர்கள் எல்லோரும் என்னுடன் இருக்கும்போது கட்சியை அழிய விடமாட்டேன். விரைவில் தொண்டர்களைச் சந்திக்க வருகிறேன். எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்னையை உடன் இருந்து எதிர்கொண்டிருக்கிறேன். அதில் இருந்து மீண்டு வந்துதான் ஆட்சியை அமைத்தோம். இதெல்லாம் எனக்கு புதிது இல்லை. ஜெயலலிதாபோல நாமும் தொண்டர்களுடன் வந்து காட்டி, ஆட்சியையும் அமைப்போம்.” என்று பேசியிருந்தார்.
 இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த பாரதி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “கட்சிக்காகக் குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது” என்று சசிகலா தெரிவித்துள்ளார். சசிகலா பேசும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகும் நிலையில், அதிமுகவில் பரபரப்பு நீடிக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?