ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..!

Published : Jun 15, 2021, 06:56 PM ISTUpdated : Jun 15, 2021, 07:01 PM IST
ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்.. ஒரே போடு போட்ட சசிகலா.. ஆட்டம் காணும் அதிமுக..!

சுருக்கம்

ஒபிஎஸ் அவராகத்தான் விலகிப்போய் தர்மயுத்தம் செய்தார், அவர் அப்படி செய்யவில்லையென்றால் நான் சிறைக்கு சென்றபோது அவரைதான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு போய் இருப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஓபிஎஸ் அவராகத்தான் விலகிப்போய் தர்மயுத்தம் செய்தார், அவர் அப்படி செய்யவில்லையென்றால் நான் சிறைக்கு சென்றபோது அவரைதான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு போய் இருப்பேன் என சசிகலா பேசிய ஆடியோ அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா தீவிர அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால்  எதிர்பார்த்த எந்த விஷயமும் அதிமுகவில் நடைபெறாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரது இந்த முடிவு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அரசியல் ரீ எண்ட்ரி கொடுக்க சசிகலா தயாராகி  கொண்டு வருகிறார். 

அதற்கு ஏற்றவகையில், அதிமுக தொண்டர்களுடன் அவர் பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதனால், ஆட்டம் கண்டுள்ள அக்கட்சி மேலிடம் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகி நிர்வாகியிடம் சசிகலா பேசும் 44வது ஆடியோ இன்று வெளியாகியுள்ளது. 

அதில், ஒபிஎஸ் மட்டும் அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் உங்களை சிறைக்கு செல்லவிடாமல் கூட தடுத்து நிறுத்தியிருப்பார். நீங்களும் அவரும் இணைந்து கட்சியை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று பேசிய தேனியை சேர்ந்த சிவநேசன் என்பவரிடம், ’அவராகத்தான் சென்றார், நான் ஒன்றுமே சொல்லவில்லை’ என்று சொன்னதோடு, அவர் எங்களிடமே இருந்திருந்தால் அவரைத்தான் முதல்வராக ஆக்கியிருப்பேன்.

தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை நான் செய்து காட்ட வேண்டும். எனக்கென்று என்ன இருக்கிறது. இறுதிவரை தொண்டர்கள் பக்கமே இருந்து விட்டுச் செல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!