வஞ்சகமும், துரோகமும்... டெல்லி கிளம்பிய வைகோ..!

Published : Jul 15, 2021, 06:13 PM IST
வஞ்சகமும், துரோகமும்... டெல்லி கிளம்பிய வைகோ..!

சுருக்கம்

மேகதாது, கல்வி, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து வஞ்சகமும், துரோகமும் செய்து வருகிறது

தமிழகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க ஏழு அரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து டெல்லிக்கு செல்வதாக வைகோ கூறியுள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்ற அனைத்துக் கட்சி தீர்மானத்தை வலியுறுத்தி சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் ஒன்றிய அமைச்சரை சந்தித்து கோரிக்கை அளிக்கவுள்ளனர். இந்நிலையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி செல்லும் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ’’தமிழ்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவே ஏழரை கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒன்றிய அமைச்சரிடம் எடுத்துக் கூற, ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் குரலாக நாங்கள் செல்கிறோம்.

 ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு நயவஞ்சகம் செய்து வருகிறது எனக் கூறிய வைகோ, மேகதாது, கல்வி, நீட் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து வஞ்சகமும், துரோகமும் செய்து வருகிறது’’என விமர்சனம் செய்தார்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!