சாத்தான்குளம் தந்தை மகன் மரணம். ADSP, DSP நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.!

By T BalamurukanFirst Published Jun 29, 2020, 10:30 PM IST
Highlights

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட ஏஎஸ்பி டிஎஸ்பி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை மரணம் சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்ட ஏஎஸ்பி டிஎஸ்பி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்,இவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2பேரும், ஊரடங்கை மீறி தங்களது செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாககூறி, கடந்த 19-ந்தேதி இரவில்சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை போலீசார் தாக்கியதாககூறப்படுகிறது. பின்னர் கோவில்பட்டி கிளைசிறையில் அடைக்கப்பட்ட மகனும், தந்தையும் கடந்த 22-ந்தேதி இரவில்அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் கொடூரமாக  தாக்கியதால் இருவரும்உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தந்தை, மகன் இறப்பு குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே,காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் எஸ்.ஐ.க்கள்காவல் சப்இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,தலைமைக்காவலர் முருகன், போலீஸ் முத்துராஜ் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.எதிர்கட்சிகளின் எதிர்ப்பு குரல் பலமாக எழும்பியதற்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் ஏஎஸ்பி குமார்,டிஎஸ்பி பிரதாபன், சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றமதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட மூன்று காவல் உயர்அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராக வேண்டும்என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் மகாராஜன், நடுவர்மன்ற நீதிபதியைதரக்குறைவாக பேசியுள்ளார். இதன்காரணமாகவே மூவரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.போலீசார் மகாராஜன்..'உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா' என மாஜிஸ்திரேட்டை ஒருமையில் போலீஸ் பேசியதாகபுகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே போலீஸ் பேச்சை நீதிமன்றம் மிக கடுமையாக கருதுவதாக நீதிபதிகள் கருத்துதெரிவித்துள்ளனர். நடுவர்மன்ற நீதிபதி கேட்ட ஆவணங்களை தர போலீஸ்மறுத்துள்ளது கடுமையான குற்றம் எனவும்,மூவரையும் பணியிடமாற்றம் செய்தால் மட்டுமே விசாரணை எவ்வித இடையூறுமின்றிநடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்

click me!