"இந்தியா" என்கிற பெயருக்கு வந்த ஆபத்து... உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு..! இந்தியாவுக்கு அடுத்தடுத்த சோதனை.

By T BalamurukanFirst Published May 30, 2020, 10:11 AM IST
Highlights

இந்தியாவின் பெயரை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்றவேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 


இந்தியாவின் பெயரை பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்றவேண்டும் என டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆங்கிலேயேர்களிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் பாகிஸ்தானை தவிர்த்து நம் பாரத நாட்டை இந்தியா என்றே அழைத்து வருகிறோம். உலகம் முழுவதும் இந்தியாவுக்கு என்று ஒரு முத்திரை இருக்கிறது.வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் இந்தியாவும் இடம் பிடிக்க காத்திருக்கிறது. We are indian என்று சொல்லும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் கம்பீரம் மிடுக்கு என தன்னையறியாமலே உடல்சிலிர்க்கும்.இவ்வளவு பெரிய உணர்வை கொடுக்கக்கூடியது தான் இந்தியா. "இந்தியா என் தாய் நாடு" என்று அரசு ஊழியர்கள் முதல் குடியரசு தலைவர் வரைக்கும் உறுதிமொழியேற்பார்கள். இந்தியா என்கிற வார்த்தைக்குள் ஒவ்வொரு குடிமகனும் புதைந்து கிடக்கிறான்.

டெல்லியை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கிறார்.அந்த மனுவில் '
இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது. இப்போதும் அதே பெயரில் அழைப்பது ஆங்கிலேய காலணிய ஆதிக்கத்தை நினைவூட்டுவதாக உள்ளது.அதனால் பாரதம் அல்லது ஹிந்துஸ்தான் என மாற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.இந்த வழக்கை ஜூன் 2 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!