தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சாதி ஆதிக்க மனப்பான்மையில் இந்த கொடூரச்செயலை செய்த மனித மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
தலித் சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்கள் வாயில் சிறுநீர் கழிக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தலித் சமூக இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சாதி ஆதிக்க மனப்பான்மையில் இந்த கொடூரச்செயலை செய்த மனித மிருகங்களை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதையும் படிங்க;- எந்தவொரு வேலையும் பார்க்காமல்.. கிடைக்கும் மேடைகளில் அரசியல் பேசும் தமிழக ஆளுநர்.. செல்வப்பெருந்தகை விளாசல்!
விளிம்புநிலை மக்களை ஒரு மனித உயிரினமாக மதிக்காத சமூகத்தில்தான் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் இதுபோன்ற அநாகரீக சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது, தேசிய பாதுகாப்புச்சட்டம், எஸ்சிஃஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஐபிசி சட்டபிரிவுகள் 294 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும், மாவட்டம் முழுவதிலும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்தப் படவேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவ்விஷயத்தை கவனத்தில் கொண்டு இதுபோன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க, மனித சமூகத்தில் வாழத் தகுதியற்ற வன்கொடுமைக் குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காயம் அடைந்துள்ள இளைஞர்களுக்கு மருத்துவ வசதிகளும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.