விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை! டென்சனில் விழுப்புரம்.

Published : Feb 17, 2020, 07:31 AM IST
விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை! டென்சனில் விழுப்புரம்.

சுருக்கம்

விழுப்புரம் அருகே தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

T.Balamurukan

விழுப்புரம் அருகே தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாக சொல்லப்படும் சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொலைக்கான காரணம் இரண்டு விதமாக சொல்லப்படுகிறது. பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பலால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார் என்றும் சாலையோரம் மலம் கழிக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டதாக ஒருதரப்பினம், தாக்குதல் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர் தம் உள்ளாடையைக் கழற்றி அங்கிருந்த பெண்களிடம் காட்டியதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் ,அவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம், ஓம்சக்தி நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்துவந்த 'காரை' கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்.வயது 24.  தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிமுடிந்து வீட்டுக்குச் சென்ற அவரை, நண்பர் ஒருவர் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை எடுத்துவருமாறு கூறியதும் வீட்டில் இருந்து புறப்பட்டார். விழுப்புரம்செஞ்சி சாலையில், சே.புதூர் கிராமத்தைக் கடக்கும்போது சாலையோர மலைப் பகுதியில் அவர் மலம் கழிக்க முற்பட்டதாகவும் வயலில் இருந்தவர்கள் அவரைத் தாக்கியதாகவும் சக்திவேல் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சக்திவேல் தாக்கப்பட்ட சம்பவம் அவனுடைய அக்கா, தெய்வானைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இச்சம்பவம் குறித்து தெய்வானை பேசும் போது." நான் அங்கு போகும் போது என் தம்பி மோசமாக தாக்கப்பட்ட நிலையில் அவனது முகத்தில் ரத்தம் கொட்டியது. நாங்கள் என்ன சாதி என்று தெரிந்ததால் என் தம்பி வாயில் துணியை கட்டி  அங்கிருந்த ஆதிக்க சாதிக்காரர்கள் என் தம்பியை மோசமான வார்த்தைகளை சொல்லி திட்டிஇ மோசமாக அடித்திருக்கிறார்கள். என்னிடம் போனில் பேசியவர்கள்ச,க்திவேலை கட்டிவைத்துள்ளதாக சொன்னார்கள். அங்கே சென்றபோது கை,கால்களை அசைக்கமுடியாமல், அவனால் நகரகூட முடியாமல் கிடந்தான்..வீட்டில் பணம் எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்லலாம் என வந்தபோது, வண்டியில் இருந்து இறங்கும்போதே அவன் விழுந்துவிட்டான். உஅடனே அவசர, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றோம். ஆனால் சக்திவேல் அப்போதே இறந்துவிட்டான் என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்"என்கிறார் ஜீவனற்ற குரலில்.

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!