காலவதியான காங்கிரஸ் கட்சி.! ஜெயலலிதாவை விட வேகமாக மக்கள் சேவை செய்யும் முதல்வர்! புகழ்ந்து தள்ளிய உதயக்குமார்

By Thiraviaraj RMFirst Published Feb 16, 2020, 11:56 PM IST
Highlights

ரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதற்கு, அ.தி.மு.க.அரசின் நான்காம் ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருக்கிறார்.

T.Balamurukan

ரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியதற்கு, அ.தி.மு.க.அரசின் நான்காம் ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியிருக்கிறார்.

ரஜினி ஒரு போதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என கே எஸ் அழகிரி கூறியதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார்., ' அதிமுக அரசு நான்காம் ஆண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் காலாவதியான காங்கிரஸ் கட்சியை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,
இஸ்லாமியரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, காவல்துறை அதிகாரிகளும் அரசு பிரதிநிதிகள் ஆகவே போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்,தமிழகம் அமைதியாய் இருப்பதை விரும்பாத சிலர், இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்புகின்றனர்,அவர்களை மக்கள் தெரிந்து கொள்வார்கள்,சிறுபான்மை வாக்குகள் நகராட்சி தேர்தலில் கூடுதலாகவே அதிமுகவுக்கு கிடைக்கும்.ஜெயலலிதா அரசு, சாதி மத பேதமற்ற அரசு,குடியுரிமை சட்டம் தெரிந்தவர்கள் அமைதியாக உள்ளனர். தெரியாதவர்கள் போராடிக்கொண்டுள்ளனர். தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் கேட்டுத்தெரிந்தால் நன்றாக இருக்கும்,ஜெயலலிதா இல்லாத குறையே தெரியாத அளவுக்கு மக்களுக்கான திட்டங்களை கொடுத்து சாதனை படைத்து வருகிறார் முதல்வர்,

முதல்வர் பொறுப்பேற்று சேவை கடமை என ஆற்றும்போது கடுமையான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தனர்,அதிமுக ஆட்சி நிலைக்குமா? என்று கேட்டவர்கள் மத்தியில் நிதானமாக பொறுமையாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து சாதனை படைத்துள்ளார் முதல்வர்,அமைச்சர்கள் அதிகாரிகள் மக்கள் என அனைவரையும் தாயுள்ளதோடு அரவணைத்த பாங்கு வரவேற்புக்குரியது,முதல்வரின் எளிய அணுகுமுறையால் மக்களை ஈர்த்தார்,பணிச்சுமை அழுத்தத்தை உள்ளத்தில் அழுத்தி மறைத்து வைத்துக்கொண்டு உழைத்தவர் முதல்வர்,ஜெயலலிதாவை விட வேகமாக ஜெயலலிதா விரும்பியது போல திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர்,சட்டசபையில் புள்ளிவிவரத்தோடு முதல்வர் ஆற்றும் உரையை இந்திய நாடே உற்று நோக்கி கவனிக்கிறது,மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து ஆரோக்கியமாக திடகாத்திரமான குழந்தையை போல அதிமுக அரசை எடப்பாடி நடத்திக்கொண்டிருக்கிறார்,எவராலும் முடியாது என சொன்னவர்கள் மத்தியில் எடப்பாடியால் முடியும் என்றாகி, இவரால் மட்டுமே முடியும் என ஆகிவிட்டது,பொக்கிஷமாக வரலாற்றுப்பாடமாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது,வருவாய் பற்றாக்குறை இருந்தாலும், நிதிபற்றாக்குறை இருந்தாலும் அனைத்து திட்டங்களும் அட்சய பாத்திரம் போல கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,மதுரையை பிரிக்க மக்கள் கோரிக்கை வைத்தார்கள் என்றால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்,முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
 

click me!