காக்கிநாடா - பெங்களூர் மற்றும் பெங்களூர் - நாகர்கோவில் இடையே தினசரி சேவை.. தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பு.

By Ezhilarasan BabuFirst Published Jan 30, 2021, 5:25 PM IST
Highlights

காக்கிநாடா - பெங்களூர் மற்றும் பெங்களூர் - நாகர்கோவில் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 

காக்கிநாடா - பெங்களூர் மற்றும் பெங்களூர் - நாகர்கோவில் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 
ரயில்வே வாரியத்தின் அனுமதியை தொடர்ந்து காக்கிநாடா - பெங்களூர் மற்றும் பெங்களூர் - நாகர்கோவில் இடையே தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு: காக்கிநாடா - பெங்களூர் சிறப்பு ரயில் (காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக) காக்கிநாடா டவுனில் இருந்து ஜனவரி 30ம் தேதி முதலும், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 2ம் தேதி முதலும் ரயில் சேவை. 

வண்டி எண் 07209 காக்கிநாட டவுன் - பெங்களூர் சிறப்பு ரயில், காக்கிநாட டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:25க்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12:10க்கு பெங்களூர் ரயில் நிலையம் சென்றடையும். மறுமார்கத்தில் வண்டி எண் 07210 பெங்களூரு - காக்கிநாடா டவுன் சிறப்பு ரயில், பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:30க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6:40க்கு காக்கிநாடா டவுன் ரயில் நிலையம் சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். பெங்களூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை, திருநெல்வேலி வழியாக)பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 31ம் தேதி முதலும், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி முதலும் ரயில் சேவை. வண்டி எண் 07235 பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில், பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடையும். 

மறுமார்கத்தில் வண்டி எண் 07236 நாகர்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில், இரவு 7:10க்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9:20க்கு பெங்களூரு ரயில் நிலையம் சென்றடையும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!