மீண்டும் சைக்கிளில் பயணிக்கப்போகும் ஜி.கே.வாசன்...!

By vinoth kumar  |  First Published Mar 18, 2019, 5:16 PM IST

மக்களவை தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 


மக்களவை தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பிடித்துள்ளது. தமாகாவுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 2019 மக்களவைத் தேர்தலில், என்.ஆர்.நடராஜன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் அறிவித்தார். வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற தலைப்பில் த.மா.கா. சார்பில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

இம்மாத இறுதியில் தொடங்கி 16 நாட்கள்  தான் பிரசாரம் செய்ய உள்ளோம் என்றார். மேலும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மூப்பனார் இருந்த போதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தது. இருப்பினும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதற்கு தென்னந்தோப்பு சின்னம் கிடைத்திருந்தது. இந்நிலையில், தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது ஜி.கே.வாசன் மற்றுஞும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!