ADMK vs BJP: பாஜகவிற்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை- மோடி அரசை இறங்கி அடித்த சி.வி சண்முகம்

By Ajmal KhanFirst Published Mar 27, 2024, 9:42 AM IST
Highlights

இன்னொரு முறை மத்தியில்  பாஜக மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயகத்து ஒரு மிகப்பெரிய ஆபத்து என தெரிவித்த சி.வி.சண்முகம் அமலாக்கத்துறை, புலனாய்வு துறை, வருமான வரித்துறை இது தான் பாஜகவுடைய கூட்டணி கட்சி என விமர்சித்துள்ளார். 
 

இரட்டை இலையை முடக்க திட்டம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரத்தில் அதிமுக செயல் வீரர்கள், செயல் வீராங்கனை கூட்டம் நடைபெற்றது. அப்போது விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாக்யராஜை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தொண்டர்களிடையே வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அவர்,  அண்ணா திமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்,  எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கம், , அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி இந்த இயக்கத்தை முடக்கி விடலாம்  என நினைக்கிறார்கள்.

தொடர்ந்து துரோகிகளை வைத்து சின்னத்தை முடக்கி விடலாம் என நினைத்து வருகின்றனர். ஆனால் முடியவில்லை,  என்னவென்றால்  துரோகியை விலைக்கி வாங்கி விடலாம். ஆனால்  இந்த அண்ணா திமுக தொண்டனை விலைக்கு வாங்க முடியாது என தெரிவித்தார்.

பொன்முடிக்கு மீண்டும் ஜெயில்

அமைச்சர் பொன்முடி மற்றொரு வழக்கில் தேர்தல் முடிவுகள் வருவதற்க்குள் உள்ளே இருப்பாரா? வெளியே இருப்பாரா என்று கூட அவருக்கு தெரியாது. அதிமுக என்று ஒரு கட்சி இருக்கான்னு கேட்கிறார் பொன்முடி, பதவியேற்று ஒரு நாள் கூட ஆகவில்லை, பொன்முடிக்கு வாய்தான் எதிரி ஏதோ கஷ்டப்பட்டு ஜெயிலுக்கு போற நேரத்துல ஏதோ நீதிபதி உத்தரவால் தப்பித்து மீண்டும் அமைச்சராகி 48 மணி நேரம் கூட ஆகல அதற்க்குள் தேர்தல் விதிமுறை மீறியிருக்கார்.

தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் 100 மீட்டருக்கு முன்பு யாராக இருந்தாலும் வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் ஐந்து பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.  ஆனால் இவர் கட்சிக் கொடியை காரில் கட்டிக்கொண்டு, வேட்பாளருடைய சின்னத்தை காரில் வரைந்து வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று உள்ளார். இதனை தேர்தல் அதிகாரி வேடிக்கை பார்க்கிறார்கள் காவல் துறையும் வேடிக்கை பார்க்கிறார்கள். 

மீண்டும் மோடி.. வேண்டாம் மோடி

திமுக அணையற விளக்கு பிரகாசமா எரியுது,  திமுகவும் பாஜகவும் ஒட்டி உறவாடினர்,  2ஜி வழக்கில் 6 ஆண்டுகளாக வழக்கு எடுக்கலாமா வேண்டாமான்னு கிடப்பில் போட்டவர்கள் எப்படியோ இப்ப விசாரணைக்கு எடுத்துக்கிட்டாங்க,  அந்த அளவுக்கு நெருக்கமா திமுகவும் கனிமொழியும் பாஜகவுடன் இருப்பதாக தெரிவித்தார். திமுகவுக்கு போடுகின்ற ஓட்டும், பாஜகவுக்கு போடுகின்ற ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு போடுகின்ற ஓட்டு என தெரிவித்தார்.

மக்களைப் பற்றி சிந்திக்காத அரசு பாஜக மக்களிடையே மத வாதத்தைத் தூண்டி வருகிறது. மீண்டும், மோடி மீண்டும் மோடி என்கின்றார் நாங்கள் என்ன சொல்கிறோம், வேண்டாம் மோடி வேண்டாம் மோடி போதும்டா சாமி போதுண்டா சாமி , நீங்கள்  ஆண்ட பத்தாண்டு போதும்டா சாமி, அந்த அளவிற்கு மக்கள் கஷ்டப்பட்டது எல்லாம் போதும் என்கிறோம் என கூறினார்.

4 எம்எல்ஏ அதிமுக போட்ட பிச்சை

இன்னொரு முறை மத்தியில்  பாஜக மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஜனநாயகத்து ஒரு மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர வேண்டும்.  பாஜகவுக்கு எதிராக இருந்தால் உன் மீது  ஈடி,  சிபிஐ, ஐ டி வழக்கு பாயும், பாஜகவுடனைய கூட்டணி கட்சிகள் அமலாக்கத்துறை மத்திய புலனாய்வுத்துறை வருமானவரித்துறை  என்று பேசினார்.  மேலும் பேசிய அவர் பாஜகவிற்கு  நாங்கள் போட்ட நான்கு எம்எல்ஏ சீட்  பிச்சையால் ஆனால் இன்று  எங்கு பார்த்தாலும் மிரட்டி வசூல்  வேட்டையில் ஈடுபடுகின்றனர் என கடுமையாக சி.வி.சண்முகம் விமர்சனம் செய்தார். 

இதையும் படியுங்கள்

aiadmk: நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் திடீரென ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..!

click me!