Annamalai : அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை.. எங்க அம்மாவ பார்த்து இரண்டு மாசம் ஆச்சு- அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Mar 26, 2024, 2:00 PM IST

இந்தியாவின் பரிமாண தன்மையை மாற்ற பாஜகவிற்கு 400 எம். பி க்கள் வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை, எதிரணியினர் பேச விடாமல் தடுக்க வேண்டும் என்ற கர்வத்திற்காக அல்ல , நாட்டின் வளர்ச்சிக்காக என தெரிவித்தார். 


கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்சமன்ற தொகுதியில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பாஜக மாநில தலைவரும் , கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று ஆலோசனை வழங்கினார். இதனை தொடர்ந்து பாஜகவினர் மத்தியில் பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய கட்சி பாஜக என அனைவருக்கும் தெரியும் என கூறினார்.

Tap to resize

Latest Videos

 மீண்டும் நரேந்திர மோடி பிரதமாராக அமர்வார் என தெரிந்து நடக்கும் தேர்தல் இந்த தேர்தல்,  கெட்டவர்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்றால் நல்லவர்கள் பேச துவங்க வேண்டும், பாஜக ஆட்சிக்கு எதனால் வர வேன்டும் என பேச வேண்டும், உங்களுக்கும் அரசிற்கும் பாலமாய் இருப்பேன் . தொகுதிக்கு தேவையானதை டெல்லியில் சன்டையிட்டு பெற்று தருவேன் என தெரிவித்தார். 

இந்தியாவை மாற்ற 400 எம்பிக்கள் வேண்டும்

இந்த தொகுதியில் முக்கியமாக கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி வேண்டும்.  அந்த திட்டத்தை மத்திய அரசிடம் இருந்து எந்த வேட்பாளரால் பெற்று தர  முடியும் என்பதை யோசித்து பாருங்கள். அந்த வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுங்கள் என தெரிவித்தார்.  கோவையில் தற்போதே தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டது.  உங்கள் தொகுதி பிரச்சனைகளை மேலே  கொண்டு சென்று சரி செய்வதற்கு ஒரு நபர் தேவை.   இந்தியாவின் பரிமாண தன்மையை மாற்ற 400 எம். பி க்கள் வேண்டும். எதிரணியினர் பேச விடாமல் தடுக்க வேண்டும், கர்வத்திற்காக அல்ல , நாட்டின் வளர்ச்சிக்காக என தெரிவித்தார். நாடாளுமன்றதேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கரூர்- கோவை இடையே 6 வழிச்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,  சமையல் எரிவாயு பைப் மூலம் வீட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.  

அம்மாவை பார்த்து 2 மாதம் ஆகிவிட்டது

தமிழகத்தில் பாஜக எம்.பிக்கள் இல்லாததால் வெறும் 2.4 சதவீத வீடுகள் தான் நமக்கு கிடைத்துள்ளது. மோடி பாரபட்சம் பார்ப்பதில்லை, பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது. மக்களுக்காக கம்யூனிஸ்ட் எம்பிக்கள் கேள்வியே கேட்பதில்லை.  தற்போதுள்ள கோவை எம்.பியை யாருமே பார்த்ததில்லை, ஆனால் அண்ணாமலையை மாநில தலைவராக எத்தனை பேர் பார்த்துள்ளிர்கள் என கேள்வி எழுப்பினார்.

அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே  இல்லை. என் அம்மாவை பார்த்தே 2 மாதம் ஆகிவிட்டது. நான் தெளிவாக உள்ளேன் . இப்போது மாற்றம் இல்லை என்றால் எப்போதும் இல்லை. என்பதற்காக தொடர்ந்து உழைத்து  கொன்டிருக்கிறேன் என தெரிவித்தார். 19 பேர் பாஜகவில் போட்டியிடுகிறார்கள் . 40 தொகுதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் என்னை சந்திக்கவில்லை என  எதிர்பார்க்காமல்  நீங்களே அன்னாலமலையாக மோடியாக  நினைத்து பிரசாரம் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். 

இதையும் படியுங்கள்

சௌமியா அன்புமணி, பாரிவேந்தருக்கு இத்தனை கோடி சொத்துகளா.!! வேட்பு மனுவில் வெளியான மிரள வைக்கும் தகவல்கள்
 

click me!