ஐ.டிக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்...! - நைசாக நழுவிய சட்டத்துறை அமைச்சர்...! 

Asianet News Tamil  
Published : Nov 13, 2017, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
ஐ.டிக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம்...! - நைசாக நழுவிய சட்டத்துறை அமைச்சர்...! 

சுருக்கம்

cv sanmugam said not relationship for income tax between government

வருமானவரித்துறை சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

கடந்த 5 நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து வருமான வரித்துறை தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். 

சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 5-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனை 5 நாட்களுக்கு முன்பு காலை 6 மணிக்கு தொடங்கியது. இந்த சோதனையை 1800 அதிகாரிகள் 187 இடங்களில் மேற்கொண்டனர். 

ஆனால் நேற்று முன்தினம் மட்டும் 40 இடங்களில் சோதனை முடிவுற்று 147 இடங்களில் தொடர்ந்தது. மூன்றாவது நாளான இன்று 137 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 

இதனிடையே சசிகலா உறவினர்கள் 150 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள், பொருட்கள், சொத்துக்கள் மதிப்பு பற்றி வருமான வரித்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.  எடப்பாடி அரசின் ஏவலின் படியே சோதனை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வருமானவரித்துறை சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் வருமானவரித்துறைக்கு கிடைத்த தகவலின்படி சோதனை நடைபெற்றது எனவும் தெரிவித்தார். 

மேலும் இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்குத்தான் நிச்சயம் கிடைக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம்  குறிப்பிட்டார். 

PREV
click me!

Recommended Stories

ஈரானில் 153 நகரங்களில் 1,000 இடங்களில் தாக்குதல்.. சூறையாடும் அமெரிக்க-இஸ்ரேல்..!
திமுக ஆட்சியில் ரத்த ஆறு.. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத முதல்வர்.. இபிஎஸ் ஆவேசம்!