திருவள்ளுவருக்கு சிலுவைய போடு, இல்ல குல்லா போடு, எனக்கு என்ன..?? அசால்டா பேசி அதிரவிட்ட கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 4, 2019, 6:05 PM IST
Highlights

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். திருவள்ளுவரைப் பற்றி ஆய்வு நடத்த உள்ளோம். சமணத் துறவி போல திருவள்ளுவரின் ஆடைகள் உள்ளது . அதுகுறித்து லார்ட் எல்லிஸ் நாணயங்களில் உள்ள படத்தை ஆய்வு செய்த பிறகுதான் அதை உறுதியாக கூற முடியும்.  அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு,  சிலுவை குல்லா போட்டாலும்  எனக்கு எந்த  பிரச்சினையும் இல்லை என அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர்.  என்னைப் பொருத்தவரையில் அவருக்கு குல்லா போட்டாலும் சிலுவை போட்டாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  பாஜகவின் இணையதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற ஆடை அணிந்து நெற்றியில் பட்டை கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருப்பது போல புகைப்படம்  வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.  இதுகுறித்து ஏற்கனவே தன் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் தமிழக கலாச்சாரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். அதில்,  திருவள்ளுவர் தெய்வப்புலவர் அவர் நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை என்று தனது  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை தமிழ்ச்  சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  கீழடி அகழாராய்வு விவரம் கதையாக்கமாக வர உள்ளது என்றார்.  ஓராண்டில் அருங்காட்சியக பணிகள் நிறைவு பெற்று நாள் ஒன்றுக்கு 10,000 பேர் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.  அத்துடன் மத்திய தொல்லியல் துறை நமக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர்கள் அகழ்வாய்வில் எடுத்த பொருட்களை நம்மிடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர் என்றார்.  மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழ்வாய்வு முடிவுகள் கிடைத்துள்ளது அதன் முடிவுகள் விரைவில் தமிழாக்கம் செய்யப்படும் என்றார்.  அத்துடன் வரும் ஜனவரியில் கீழடியில் உள்ள 4 கிராமங்களில் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.  அத்துடன் மதுரையில் அமைய உள்ள தமிழன்னை சிலை எந்த உலோகத்தில் வைப்பது என்கிற குழப்பம் உலவுகிறது.  விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு விரைவில் சிலை அமையும் என்றார். 

 திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். திருவள்ளுவரைப் பற்றி ஆய்வு நடத்த உள்ளோம். சமணத் துறவி போல திருவள்ளுவரின் ஆடைகள் உள்ளது . அதுகுறித்து லார்ட் எல்லிஸ் நாணயங்களில் உள்ள படத்தை ஆய்வு செய்த பிறகுதான் அதை உறுதியாக கூற முடியும்.  அனைவருக்கும் பொதுவான திருவள்ளுவருக்கு,  சிலுவை குல்லா போட்டாலும்  எனக்கு எந்த  பிரச்சினையும் இல்லை என அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்

click me!