தடையை நீக்கிய உயர்நீதிமன்றம்... உறுப்பினராக சேர்ந்த உதயநிதி ஸ்டாலின்..!

By Thiraviaraj RMFirst Published Nov 4, 2019, 5:26 PM IST
Highlights

உறுப்பினர் சேர்க்கையை தொடங்க தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொண்டார்.

அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு 2010-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்வராக இருந்த கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக இது போற்றப்படுகிறது. போட்டி தேர்வாளர்களுக்கு உதவி பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட நூலகமாக இது உருவாக்கப்பட்டது. பல லட்சம் புத்தகங்களைக் கொண்டிருக்கும் இந்நூலகம் போட்டி தேர்வாளர்களுக்கான வாசஸ்தலமாக திகழ்கிறது. 

இதனிடயே அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்தவும் கூட ஏற்பாடுகள் செய்தன. ஆனால் அத்தனையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. உறுப்பினர் சேர்க்கையை தொடங்க தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பலரும் இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். தற்போது திமுக இளைஞரணி செயலாளர் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், '’கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதால், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கான உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தியது அரசு. இதற்கெதிரான வழக்கில், உறுப்பினர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட்டது நீதிமன்றம். இந்தநிலையில் நானும் இளைஞரணியின் துணை செயலாளர்களும் அண்ணா நூலகத்தில் உறுப்பினர்களாக  இணைந்துகொண்டோம்’’எனத் தெரிவித்துள்ளார். 

click me!