நிர்வாக ரீதியாக கடலூர் மாவட்டத்தில் அதிரடி மாற்றம்.. ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Aug 25, 2021, 10:14 AM IST
Highlights

கடலூர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் வடக்கு மாவட்டமாகவும், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் தெற்கு மாவட்டமாகவும்,  சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 

கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தை 3ஆக பிரிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக ஒருங்கிணபை்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம் என செயல்பட்டு வரும் மாவட்டக் கழக அமைப்புகள் கழக அமைப்பு ரீதியாக இன்று முதல் கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் தெற்கு மாவட்டம் என மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு பின்வரும் சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்ட கழக செயலாளர்களாகக் கீழக்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடலூர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் வடக்கு மாவட்டமாகவும், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் தெற்கு மாவட்டமாகவும்,  சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கி கடலூர் கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக எம்.சி.சம்பத், தெற்கு மாவட்ட செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளராக கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

click me!