வீட்டை எழுதி தருமாறு மிரட்டும் திமுக எம்எல்ஏ கார் டிரைவர். கொலை வெறி தாக்குதல் நடத்தி அட்ராசிட்டி. பெண் கதறல்

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 9:54 AM IST
Highlights

தனது நிலத்தை அபகரிப்பதற்காக  திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஓட்டுனர் இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்துவதாக காவல் ஆணையரிடம் பெண் புகார் அளித்தார்.

தனது நிலத்தை அபகரிப்பதற்காக  திமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஓட்டுனர் இணைந்து கொலை வெறி தாக்குதல் நடத்துவதாக காவல் ஆணையரிடம் பெண் புகார் அளித்தார். சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சோழிங்கநல்லூரை சேர்ந்த உஷா(51) என்பவர் புகார் ஒன்றை அளித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உஷா,  சோழிங்க நல்லூரில் சமையல் வேலை செய்து கடந்த 2014 ஆம் ஆண்டு சோழிங்க நல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியில் 700 சதுர அடி கொண்ட நிலத்தை வாங்கி வீடு ஒன்றை கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக அவர் கூறினார். கடந்த 2008 ஆம் ஆண்டு ராஜா என்பவர் தனது வீட்டிற்கு அருகே வீடு கட்டி குடியேறியதாகவும், ராஜா சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினரான அரவிந்த் ரமேஷின் கார் ஓட்டுனர் என்பதால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தனது வீட்டை மலிவான விலையில் எழுதி கொடுக்குமாறு அடியாட்களை வைத்து தகராறில் ஈடுபட்டு வருவதாக உஷா தெரிவித்துள்ளார். 

மேலும் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து ராஜாவிற்கு வீட்டை எழுதி கொடு இல்லையென்றால் நாங்களே பறித்து கொள்வோம் எனவும் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எடப்பாடி யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்துகொள் என தன்னை மிரட்டிவிட்டு சென்றதாக அவர் கூறினார். இது குறித்து செம்மெஞ்சேரி காவல் நிலையத்தில் 12 முறையும், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு முறை புகார் அளித்தும் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். மேலும்  செம்மஞ்சேரி காவல் நிலையத்தை கட்டியதே நான் தான் காவல்துறையினர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியதாக அவர் கூறினார்.

கடந்த ஞாயிறன்று டிரைவர் ராஜா தனது அடியாட்களுடன் கடப்பாரையோடு வந்து தனது மகள், மருமகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாகவும் தனது வீட்டின் சுவரை இடித்துவிட்டு சென்றதாக அவர் கூறினார். தொடர்ந்து தனது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் தனது குடும்பத்தினரை கொலை செய்ய நினைக்கும் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், டிரைவர் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
 

click me!