ராகவனுக்கு எதிராக களத்தில் குதித்த காயத்திரி ரகுராம்.. தெய்வம் நின்று கொல்லும் என ஆதங்கம்..

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2021, 9:13 AM IST
Highlights

கே.டி ராகவன் குறித்த பாலியல் வீடியோ பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

கே.டி ராகவன் குறித்த பாலியல் வீடியோ பாஜகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் என காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தன் கண்களால் இதை நம்ப முடியவில்லை என்றும் அவர் வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.தமிழக பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வந்தவர் கே.டி ராகவன். இவர் ஊடக விவாதங்களில் பங்கேற்று பாஜக தரப்பு கருத்துக்களை மக்கள் மத்தியில் வைத்து அதன் மூலம் பிரபலமானவர். எப்போதுமே கே.டி ராகவனுக்கு பாஜகவில் தனி மரியாதை உண்டு, அவர் ரொம்ப டீசண்டானவர் என பலரும் கூறும் அளவிற்கு நீட் கிளீன் கே.டி ராகவனாக வலம் வந்தார் அவர். 

அப்படிப்பட்ட ராகவன் தன்னிடம் உதவி கேட்டு வந்த ஒரு பெண்ணிடம் வீடியோ காலில் அழைத்ததாகவும், அப்போது அவர் அரை நிர்வாணத்துடன் அந்தப் பெண்ணிடம்  பேசியதாகவும், அப்போது சில பாலியல் சேட்டைகளில் அவர் ஈடுபட்டதாகவும் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. அந்த வீடியோவை அதே கட்சியைச் சார்ந்த மதன் ரவிச்சந்திரன் என்பவர் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பதிவு செய்ததாகவும், நான்கைந்து மாதங்கள் வரை காத்திருந்து ராகவனை பொறிவைத்து வீடியோ பிடித்ததாகவும் அவர் பரபரப்பாக கூறியுள்ளார்.இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலை இடம் இதை எடுத்துச் சென்றபோது அவர் ஒரு பெண்ணுக்கு நியாயம் வேண்டுமென்றால், வீடியோவை வெளியிடுங்கள் என கூறியதாகவும், அதன் அடிப்படையிலேயே தான் இந்த வீடியோ வெளியாகி இருப்பதாகவும், மதன் ரவிச்சந்திரன் பரபரப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோ வெளியாகியது ஒட்டுமொத்த ஆர்எஸ்எஸ் , பாகவினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.தமிழக பாஜகவில் சாதிரீதியான கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் மோதலின் வெளிபாடு இது என்றும், தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என துடிக்கும்  பாஜகவை வேரோடு சாய்க்கும் சம்பவம் இது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

எதற்கெடுத்தாலும் ஆவேசமாக கருத்து தெரிவிக்கும் பாஜகவின் காயத்ரி ரகுராம் இந்த விஷயத்தில், முதலில் எனது கண்களால் இதை நம்ப முடியவில்லை.. பிறகு நான் விழித்துக் கொண்டேன், சட்டம் என்பது அனைவருக்கும் சமம் தான், நிச்சயம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சட்டத்தின் முன் இருந்து தப்பித்தாலும் தெய்வம் தண்டிக்கும், அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு பாஜகவினரை மிகுந்த அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. யாராக இருந்தாலும் மிகவும் மோசமான டோனில் விமர்சிக்கும் காயத்ரி ரகுராம் ராகவன் விஷயத்தில் மிக சாப்டாக கருத்துச் சொல்லி இருப்பது ஏன் என பலரும் காயத்ரியை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

 

click me!