இந்த விஷயத்தில் தயவு தாட்சணை கிடையாது.. கிரிமினல் நடவடிக்கை தான்.. எச்சரிக்கும் அமைச்சர் சேகர்பாபு..!

By vinoth kumarFirst Published Jul 10, 2021, 12:40 PM IST
Highlights

அரங்கசாதசுவாமி கோவில் கடந்த 1866ம் ஆண்டு பிரிட்டிஷார் கணக்கின்படி 330 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே கோயில் வசம் உள்ளது. மீதம் உள்ள நிலங்களில் குடியிருப்புகள் கடைகள் கட்டுப்பட்டுள்ளன. இந்த நிலம் குறித்த வழக்குகள் சில நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான 330 ஏக்கர் நிலத்தில் தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே கோயில் வசம் உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர்பாபு;- கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த திருக்கோயில்கள் புனரமைக்கப்படாமல் கும்பாபிஷேக நடத்தப்படாமல் இருந்தது. இனிவரும் காலத்தில் அதுபோன்ற கோயில்களை கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான கோயில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். 

கடந்த ஆட்சியில் 2011 மற்றும் 2020 ஆண்டுகளில் கோயிலில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என அறிவித்தனர். 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த பணியாளர்களின் விவரம் பெற்று, அதற்குரிய கருத்து பெற்று ஒரு மாதத்தில் பணி நிரந்தரம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். பணி நிரந்தரம் செய்த பிறகு இருக்கும் காலிப் பணியிடங்களில் மற்றவர்களைப் பணியமர்த்தும் பணிகள் செயல்படுத்தப்படும். ஸ்ரீரங்கம் அரங்கசாதசுவாமி கோவில் கடந்த 1866ம் ஆண்டு பிரிட்டிஷார் கணக்கின்படி 330 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. தற்போது 24 ஏக்கர் நிலம் மட்டுமே கோயில் வசம் உள்ளது. மீதம் உள்ள நிலுங்களில் குடியிருப்புகள் கடைகள் கட்டுப்பட்டுள்ளன. இந்த நிலம் குறித்த வழக்குகள் சில நீதிமன்றத்தில் நிலவையில் உள்ளது. 

அதேபோல் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள் அதிக வாடகை பாக்கி உள்ளவற்றை பாரபட்சம் இல்லாமல் வசூல் செய்யவேண்டும். நில ஆக்கிரமிப்பை அதிக அளவு மீட்கும் அலுவலர்களுக்கும், வாடகை பாக்கி அதிகம் வசூலிக்கும் அலுவலர்களுக்கும் முதல்வர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

click me!