சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்கையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு.

Published : Jul 10, 2021, 12:37 PM IST
சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்கையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு.

சுருக்கம்

மேலும் அவர் மீது பதியப்பட்டுள்ள இரு வழக்கிலும் அவரை கைது காட்ட சிவசங்கர் பாபாவுக்கு எதிராக அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முழுவீச்சில் திரட்டி வருவதாக கூறப்படுகிறது.   

சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்கையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்த சுசில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு நிலையில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டதையடுத்து, டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து உடல் நலப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதால்,  சிவசங்கர் பாபா மீது பதிவு செய்துள்ள 3வது வழக்குகளையும் போக்சோ பிரிவின் கீழ் மாற்ற சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிவசங்கர் பாபா மீது பாதிக்கப்பட்ட 18 முன்னாள் மாணவிகள் இதுவரை வாக்குமூலம் அளித்துள்ளனர். சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு, ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது பதியப்பட்டுள்ள இரு வழக்கிலும் அவரை கைது காட்ட சிவசங்கர் பாபாவுக்கு எதிராக அனைத்து ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் முழுவீச்சில் திரட்டி வருவதாக கூறப்படுகிறது. 

 

PREV
click me!

Recommended Stories

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க.. இன்று மாநகரமே குலுங்கப்போகுதாம்.. ராமதாஸ் எச்சரிக்கை
வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி