தட்டி தூக்கிய ராமநாதபுரம், விழுப்புரம். 2 மாவட்டங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

By Ezhilarasan BabuFirst Published Jul 10, 2021, 12:15 PM IST
Highlights

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும், கடந்த ஜூன் 25ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 2298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும்,

ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், 

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும், கடந்த ஜூன் 25ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 2298 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாகவும், அதில் ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக கோவையில் 401 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், அடுத்தபடியாக சென்னையில் 244 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாகவும், அதேப்போல்,குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், தர்மபுரியில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

click me!