"பிசியோதெரபியில் இருக்கும் முதல்வர் எப்படி கையெழுத்து போட முடியும்??"- சி.ஆர்.சரஸ்வதி காட்டம்

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 03:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
"பிசியோதெரபியில் இருக்கும் முதல்வர் எப்படி கையெழுத்து போட முடியும்??"- சி.ஆர்.சரஸ்வதி காட்டம்

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரால் கையெழுத்து போட முடியும் என்றாலும் கையெழுத்தில் பிழை வந்துவிட கூடாதே எனபதற்காக முதல்வர் கைரேகை வைத்ததை விமர்சிப்பதா என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி காட்டமாக தெரிவித்துள்ளார். 

முதல்வர் ஜெயலலிதா கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.  லண்டன் மருத்துவர் ரிச்சர்டு , எய்ம்ஸ் மருத்துவர்கள் , சிங்கப்பூர் மருத்துவர்கள் சிகிச்சையால் மிக விரைவாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவம் எ மற்றும் பி யில் கையெழுத்துக்கு பதில் கைரேகை வைத்திருந்தார். இது பற்றி பலரும் விமர்சனம் செய்திருந்தனர். முதல்வர் உடல் நிலை அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை காரணமாக கையெழுத்தை சரியாக போட முடியாத நிலையில் கைரேகை வைக்க இருக்கும் வாய்ப்பை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் இருந்ததால் கைரேகை இட்டு அரசு மருத்துவர் சான்றொப்பத்துடன் படிவம் அளிக்கப்பட்டது.

முதலில் கைரேகையில் பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் பின்னர் படிவம் பி -யில் முதல்வர் விரல் ரேகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மருத்துவர் சான்றொப்பம் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்று அப்போலோவில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமிப்புச்செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் இது பற்றி பதிலளித்தனர். சி.ஆர்.சரஸ்வதி பேசும்போது முதல்வர் சிகிச்சை முடிந்து தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு விரைவாக தேறி வருகிறார். 

விரைவில் முதல்வர் வழக்கமான தனது பணிகளை பார்ப்பார். ஆனாலும் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட படிவம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகிறார்கள் . முதல்வர் பிசியோதெரபி சிகிச்சையில் இருக்கிறார். அவரால் அகையெழுத்திட முடியும் என்ற போதிலும் கையெழுத்தில் சிறிய மாற்றம் வந்தாலும் அது தேர்தல் பணியை பாதிக்கும் என்பதால் கைரேகை வைக்கப்பட்டது. இதை விமர்சனம் செய்யலாமா? என்று காட்டமாக கேட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டெல்லியில் அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு.. பேசியது என்ன? கசிந்த அதிரடித் தகவல்கள்!
ஜோதிமணி எம்.பி.யிடம் கேள்வி கேட்ட இளைஞருக்கு மிரட்டல்.. பரபரப்பு வீடியோ! நடந்தது என்ன?