"திமுகவினர் பணம் கேட்டால் கட்சியிலிருந்து தூக்குவேன்" - ஸ்டாலின் அதிரடி

First Published Nov 3, 2016, 2:28 AM IST
Highlights


மீண்டும் அதிரடியாக களத்தில் குதித்துவிட்டார் மு.க ஸ்டாலின்...

நேற்று முன்தினம் மதுரை... நேற்று சென்னை... இன்று தருமபுரி... என தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றி சுழன்று வருகிறார்.

நடைபெற உள்ள மூன்று தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைதேர்தலுக்கு திமுக சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கபட்டு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளிலும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக ஸ்டாலின் வளம் வந்தார்.

அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே வேட்பாளர் சரவணனுக்கு நெருக்கடி சொந்த கட்சியினரால் கொடுக்கப்பட்டது.

போஸ்டர் அடிக்க பணம்... ஆட்களை அழைத்து வர பணம்... ஒட்டு கேட்க பணம்... பொன்னாடை போர்த்த பணம்... சாப்பாடு செலவுக்கு பணம்.. பேண்டு வாத்தியத்துக்கு பணம்..

இப்படி எல்லாவற்றிற்கும் 'பணம்' 'பணம்' 'பணம்' என வேட்பாளர் சரவணன் நச்சரித்து பீதியை கிளப்பியுள்ளனர்.

இதனால் கதிகலங்கி போன டாக்டர் சரவணன் ஸ்டாலினிடம் கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார்.

இதை கேட்ட ஸ்டாலின் கொஞ்சம் ஆடிபோய் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம்.

உடனடியாக மதுரையின் திமுக பிரமுகர்களான தளபதி,ஜெயராமன்,மூர்த்தி சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் உள்ளிட்ட திமுக மூத்த நிர்வாகிகளை அழைத்து கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பினாராம்.

இனி திருப்பரங்குன்றம் மட்டுமல்ல எந்த தொகுதியிலும் பூத் செலவிற்காக மட்டுமே வேட்பாளரிடம் பணம் கேட்க வேண்டும் எனவும்,

கவனத்தை திசை திருப்பும் வகையிலும் மன உளைச்சல்அளிக்கும் வகையிலும் டார்ச்சர் செய்தால் கட்சியை விட்டே தூக்கி விடுவேன் என நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்க சொன்னாராம்.

ஸ்டாலினின் இந்த அதிரடி அரசியாலால் இடைதேர்தலை பயன்படுத்தி நலல் பணம் பார்க்கலாம் என எண்ணியிருந்த திமுக நிர்வாகிகள் கலங்கி போயுள்ளனராம்.

click me!