எந்த மெட்டில் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்து தான்.. இது அண்ணாமலைக்கு தெரியாதா? கே.பாலகிருஷ்ணன் விளாசல்

By vinoth kumar  |  First Published Apr 29, 2023, 7:36 AM IST

கே.எஸ். ஈஸ்வரப்பா மட்டும் தமிழ் தாய் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் அதனை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநிலத்தின் கன்னட வாழ்த்து கீதத்தை போடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 


கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கே. ஈஸ்வரப்பாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- Watch Video: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!

ஆனால், கே.எஸ். ஈஸ்வரப்பா மட்டும் தமிழ் தாய் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் அதனை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநிலத்தின் கன்னட வாழ்த்து கீதத்தை போடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது பெரும் சரச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலானது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்துவதை தடுக்க முடியாத அண்ணாமலை.! மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார்- கனிமொழி

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள;- கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைக்கவிட்டு பாதியில் நிறுத்தி அவமதித்துள்ளனர். அப்போது மேடையிலேயே நின்றுகொண்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் இந்த காட்சியை பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர்.

இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார்.

எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ் தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா?

— கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan (@kbcpim)

 

சமூக ஊடகங்களில் இந்த காட்சியைப் பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர். இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார். எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

click me!