Covid vaccine:உடம்புல அங்காளம்மா.. சாமி ஆடி செவிலியர்களை விரட்டிய மூதாட்டி.. மோடியே வந்தாலும் நடக்காது.

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2021, 10:51 AM IST
Highlights

அப்படி போகும்போது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட மாட்டேன் என எதிர்ப்பு தெரிவித்து சாமி ஆடியுள்ளார். இதற்கான செய்திகள் இணைய தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநில சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் தட்சிணாமூர்த்தி நகரில் சுகாதார ஊழியர்கள் ஊசி போடாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்தனர். 

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்து, மூதாட்டி ஒருவர் திடீரென சாமியாடி தடுப்பூசி செலுத்த வந்த  செவிலியர்களை விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க முடியும் என உலக நாடுகள் முதல் சர்வதேச சுகாதார நிறுவனம் வரை எச்சரித்து வரும் நிலையில்,  இந்தியா போன்ற நாடுகளில் பலரும்  தடுப்பூசி சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டும் அவல நிலை தொடர்கிறது. இது தொடர்பாக எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டம் இன்னும் தடுப்பூசி மீதான சந்தேகம் தீரவில்லை என்ப்பதையே இது காட்டுகிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 150க்கும் அதிகமான நாடுகளை கபளிகரம் செய்துள்ளது. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இன்னும் இந்த வைரஸில் இருந்து மீண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என ஒட்டுமொத்த மனித சமூகமும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒன்றுக்கு இரண்டு  என தடுப்பூசிகளை உருவாக்கிய இந்தியா, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் அதை மக்களுக்கு செலுத்த தொடங்கியது. துவக்கத்தில் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தபோது மக்கள் அதைச் செலுத்திக் கொள்ள தயங்கினார். ஆனால்  தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கு பாதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது என பல்வேறு தொடர் விழிப்புணர்வு மக்களிடையே  ஏற்படுத்தப்பட்டு பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 203 நாட்களில் 50 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. குறிப்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சரியாக தடுப்பூசிகளை தருவதில்லை, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அதிகமாகவும், மற்றவர்க்கு குறைவாகவும் தரப்படுகிறது என தமிழகம் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குற்றச்சாட்டின. 

இதனால் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டன. ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் தடுப்பூசி செயல்பாடுகளுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என உறுதி அளித்தது. தொடர்ந்து தடுப்பூசிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி  100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவை பாராட்டியுள்ளன. ஆனால் இந்தியாவில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டும்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் என்ற வைரசால் உலகநாடுகள் அச்சத்தில் இருந்து வருகின்றன. இந்தியாவிலும் அந்த வைரசை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி முறையாக போடப்பட்டு இருக்கிறதா என்பதை அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். 

"

அப்படி போகும்போது மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட மாட்டேன் என எதிர்ப்பு தெரிவித்து சாமி ஆடியுள்ளார். இதற்கான செய்திகள் இணைய தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாநில சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் தட்சிணாமூர்த்தி நகரில் சுகாதார ஊழியர்கள் ஊசி போடாதவர்கள் குறித்து விவரங்களை சேகரித்தனர். அப்போது குடிசை வீட்டில் வசித்து வரும்  முதியவரும் மூதாட்டியும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து தடுப்பு செய்துகொள்ளுமாறு அவர்களிடம் சுகாதார ஊழியர்கள் கேட்டனர். ஆனால் ஊசி செலுத்தி கொள்ள மாட்டோம் என கூறி அத்தம்பதியினர் அடம் பிடித்தனர். ஊசி போடுவதால் ஒன்றும் ஆகாது என சுகாதார ஊழியர்கள் எடுத்துக்கூறினார். ஆனாலும் அதை ஏற்க மறுத்த மூதாட்டி, ஒரு கட்டத்தில் சாமி வந்தது போல ஆடியதுடன், தாளாது.. தாளாது அங்காளம்மா உடம்புல வந்து இருக்கேன் என கூறி மூதாட்டி ஆவேசமாக சாமி ஆடினார். அதை பார்த்த ஒன்றும் செய்யமுடியாத சுகாதாரப் பணியாளர்கள் தலையில் அடித்தபடி அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இல்ல.. மோடியே வந்தாலும் வேலைக்கு ஆகாது என பலரும் அந்த மூதாட்டியை விமர்சித்து வருகின்றனர். 
 

click me!