Actress vijayalakshmi : முட்டாப்பசங்க.. சீமானை நாறடித்த நடிகை விஜயலட்சுமி.. வெளியான அதிரிபுதிரி வீடியோ

By manimegalai aFirst Published Dec 3, 2021, 9:41 AM IST
Highlights

சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும், தொண்டர்களையும் நடிகை விஜயலட்சுமி நாறடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாக நாதகவினர் கொதித்து போய் உள்ளனர்.

சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும், தொண்டர்களையும் நடிகை விஜயலட்சுமி நாறடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாக நாதகவினர் கொதித்து போய் உள்ளனர்.

நடிகர்கள் விஜய்,சூர்யா நடித்த படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் விஜயலட்சுமி. நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அவருக்கு அண்ணியாகவும் நடித்திருப்பார்.

தம்மை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி சீமான் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இது தொடர்பாக பல கண்ணீர் வீடியோக்களை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் அவரின் வீடியோக்கள் என்றுமே பரபரப்பின் உச்சத்தில் இருக்கும். இப்போதும் அப்படித்தான் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து நாம் தமிழர் கட்சியை அதகளம் பண்ணி இருக்கிறார். தொலைக்காட்சி விவாதரங்களில் தம்மை பற்றி நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் பேசும் விஷயங்களுக்கு பதிலடி தந்துள்ளார். கிட்டத்தட்ட 2.20 நிமிடம் ஓடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

இது குறித்து அவர் அந்த வீடியோவில் கூறி உள்ளதாவது: தமிழ்நாட்டில் இருக்கும் என் அன்பான மக்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் என் பணிவான வணக்கம். ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கு ஒரு வீடியோ பேசணும்னு ஆசைப்பட்டேன்.ஒரு விவாத மேடையில் திமுக தரப்பினர் விஜயலட்சுமி பத்தி பேசுனாங்க. அதுக்கு இடும்பாவனம் கார்த்திக் பதிலடி தந்தார். தமிழ்நாட்டில் ரொம்ப புத்திசாலி, அறிவாளிகளுக்கு தான் இந்த வீடியோ போடுறேன்.

இவருக்கு(சீமான்) சொம்பு பிடிச்சிட்டு இருக்கிறது, தமிழ்நாட்டுக்கு இருக்கும் ஒரே தலைவன், தமிழ் தேசியத்தின் ஒரே தலைவன் எங்க தலைவர் என்ற முட்டாள்களுக்கு இந்த வீடியோ புரியாது, அறிவாளிங்களுக்கு புரியற வீடியோ.

"

அன்பும், நியாயமான விஷயங்களுக்கு போராடும் போராட்டமும் நியாயமான ஒன்று. தமிழக மக்களின் அன்புக்காக தான் நான் அவ்வளவு பெரிய போரில் இருந்திருக்கிறேன். நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது அடி முட்டாள்தனம் என்று சொல்வேன்.

இந்த விவாத மேடைகளை போட்டுக்கிட்டு, உட்கார்ந்து இன்டர்வியூ பண்ணிக்கிட்டு, தன்னோட வட்டாரத்துல இருக்கறவங்களை உட்கார வச்சுகிட்டு பேசிக்கிட்டு நான்தான் வின்னர், நான்தான் வின்னர் என்ற அடி முட்டாள்தனமான அரசியலை சீமானும், சீமான் கட்சியினரும் பண்ணிக்கிட்டு இருக்காங்க. திமுகவுக்கு பலம் இருக்கு, அதனால் தான் அவங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வச்சிருக்கின்றனர் என்று போட்டு தாக்கி இருக்கிறார் விஜயலட்சுமி.

நடிகை விஜயலட்சுமியின் இந்த வீடியோ இணையத்தில் அதிரிபுதிரியாக பரவி பெரும் விவாத பொருளாகி இருக்கிறது. சீமான் ஆதரவு, எதிர்ப்பு என இரு புள்ளிகளில் நின்று கொண்டு இஷ்டம் போல கருத்துகளை கூறி அலற விட்டுக்கொண்டு இருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

சீமானின் கருத்துகள், அரசியல் நிலைப்பாடு பற்றி அவரது தம்பிகள் கருத்துகளாக சீற… எதிர்ப்பு நிலையில் இருப்பவர்கள் சீமானின் சொத்துகள், அரசியலில் அவர் கூறிய அந்தர்பல்டி பேட்டிகளை ட்ரோல் செய்து அதிரி புதிரியாக்கி வருகின்றனர்….!!

click me!