கொரோனா 2வது அலை.. மீண்டும் ஊரடங்கா? அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..!

By vinoth kumarFirst Published Nov 23, 2020, 10:19 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் நடத்த உள்ளார்.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட  தகவலின் படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,39,866ஆக அதிகரித்துள்ளது.  24 மணி நேரத்தில் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,738ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா 2ம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதீதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்கள் இரவு 9 முதல் காலை 6 வரை காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக அகமதாபாத்தில் வெள்ளி இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை 57 மணி நேர முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதேபோல, மத்திய பிரதேசத்தில் போபால், இந்தூர், குவாலியர், ரத்லம், விதிசா ஆகிய மாவட்டங்களில் இரவு 10 முதல் காலை 6 வரை காலவரையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளையும், நாளை மறுநாளும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கிறார். முதல் நாளில் எட்டு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனையில் கலந்துக் கொள்கின்றனர். 2வது நாளில் எஞ்சிய மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

click me!