கோவை வருகிறாரா ஆ.ராசா? சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என பாஜக புகார்!!

By Narendran SFirst Published Sep 27, 2022, 8:05 PM IST
Highlights

கோவைக்கு ஆ.ராசாவின் வருகை சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கோவை மாநகரல் காவல் ஆணையரிடம் பாஜக புகார் அளித்துள்ளார். 

கோவைக்கு ஆ.ராசாவின் வருகை சட்டஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கோவை மாநகரல் காவல் ஆணையரிடம் பாஜக புகார் அளித்துள்ளார். முன்னதாக இந்துக்கள் குறித்து திமுகவின் ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அவர் கோவை வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கோவை மாநகர பாஜக பொறுப்பாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், இந்துக்களை கொச்சைப்படுத்தி பேசிய ஆ.ராசா கோவை வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சு பொதுமக்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. அதற்கு ஆ.ராசாவை எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 98% கடையடைப்பும், நேற்று கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பட்டத்திற்கு திரண்ட கூட்டமும் சாட்சி.

இதையும் படிங்க: தமிழகம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கோட்டை ... RSS, BJP எதற்கும் பயப்படாது .. மத்திய அமைச்சர்.

எனவே ஆ.ராசாவின் கோவை வருகையால் பாஜக உட்பட பல்வேறு அமைப்புகள் அவரை எதிர்த்துப் போராட தயார் நிலையில் உள்ளன. காவல்துறையும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அறவழியில் போராடுபவர்களை கைதுசெய்ய முற்படுவதால் சட்டஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஆ.ராசாவை எதிர்த்து பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும். ஏனென்றால் ஆ.ராசாவின் பேச்சு ஆதாரமற்றது, புனையப்பட்டது, மத நல்லிணக்கத்தை கெடுக்கக்கூடியது. மேலும் கோவைக்கு வருகை புரியும் ஆ.ராசா நீலகிரி தொகுதி அன்னூரில் அவரை வரவேற்க பெண்களுக்கு தலா ரூ.500 கொடுத்து வரவேற்பு விழா நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக என்ற நச்சு மரம்.. யாராக இருந்தாலும் அநாகரீகம் ஆபாசம்.. டார்டாராக கிழிக்கும் வானதி சீனிவாசன்.

மேலும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்னரும், ஆ.ராசா தெனாவட்டாக பேசி வருவதும், அதை தமிழக முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், திமுகவினரின் மீது கடும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே கோவை வரும் ஆ.ராசாவின் மீது பாஜகவினர் ஏற்கனவே கொடுத்த புகாரின்படி காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் பாஜக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல்குண்டு வீசிய சமூகவிரோதிகளை போர்க்கால அடிப்படையில் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!