திமுக என்ற நச்சு மரம்.. யாராக இருந்தாலும் அநாகரீகம் ஆபாசம்.. டார்டாராக கிழிக்கும் வானதி சீனிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2022, 6:00 PM IST
Highlights

திமுக என்ற நச்சு மரத்தை வளர்ச்சி ஒற்றுமை என்ற கோடாரியை கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாஜக தேசிய மகளிர் அணி  தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

திமுக என்ற நச்சு மரத்தை வளர்ச்சி ஒற்றுமை என்ற கோடாரியை கொண்டு பாஜக வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என பாஜக தேசிய மகளிர் அணி  தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக பாஜக ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வருகிறது. இதுபோன்ற அசாதாரணமான சம்பவங்களுக்கு  காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச படுகின்ற சம்பவங்கள் சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வருகிறது.

இதையும் படியுங்கள் :  ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிராக அவரச வழக்கு தொடுத்த திருமாவளவன்.. முடியாது என தூக்கி ஓரம் போட்ட நீதிபதிகள்..

அதனடிப்படையில் இதுவரை 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனால் அவர்கள்  யார் யார் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்காது, ஆனால் இதுவரை அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்து வருகிறார், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு அவப்பெயர்  ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் அரசியல் சக்திகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதுபோன்ற தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் நம் பயணத்தை தொடர வேண்டும் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “அரசு மீது குறைசொல்ல ஏதுமில்லை” ஓபிஎஸ்க்கு கேகேஎஸ்எஸ்ஆர் பதிலடி

ஆக, தீய நோக்கத்துடன் செயல்படுகின்ற சக்தி தமிழகத்தில் திமுகதான், குடும்ப அரசியல் ஊழல் என்பது திமுகவின் இரண்டு கண்கள், தங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அநாகரீகமாக, ஆபாசமாக விமர்சிப்பதை ஒரு கலாச்சாரமாக புகுத்தியவர்களே திமுகவினர் தான், இது எல்லோருக்கும் தெரியும், திமுக தலைவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கூட ஆபாசமாக விமர்சித்தவர், இந்த மண்ணில் தீய நோக்கத்துடன் செயல்படும் நச்சு மரமாக வளர்ந்துள்ளது திமுகவை ஒற்றுமை வளர்ச்சி என்ற கோடாரியை கொண்டு வீழ்த்தும் நாள் தொலைவில் இல்லை.

பாஜக வளர்வதைக் கண்டு பொறுக்கமாட்டாமல் ஜம்பம் அடிக்காமல் விட்டுவிட்டு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், யார் பெட்ரோல் குண்டு வீசினார்களோ அவர்களை விரைவாகக் கண்டறிந்து, இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இதற்கு காவல்துறையை சரியாக பயன்படுத்துங்கள், இல்லை எனில் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும். இவ்வாறு வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  

click me!