தமிழகம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கோட்டை ... RSS, BJP எதற்கும் பயப்படாது .. மத்திய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2022, 6:41 PM IST
Highlights

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் அவர் கூறிய விவரம் பின்வருமாறு:-

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், நுகர்வோர் விவகாரங்களுக்கான துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- பிளாஸ்டிக்கிற்கு மாற்றான பயன்பாடு குறித்த தேசிய மாநாட்டில் இன்று கலந்து கொண்டேன். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. ஆகவே அதன் பயன்பாட்டை  முற்றிலும் ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:   நாட்டிற்காக பாஜக, RSS தலைவர்கள் போராடியதற்கு சான்று காட்ட முடியுமா? சீமான் கேள்வி!!

பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அமைப்பு ரீதியான கலந்துரையாடலும் நடைபெற்றது. 
PFI என்ற பயங்கரவாத அமைப்பினரின் சமீபத்திய பெட்ரோல் குண்டு தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. PFI போன்ற அமைப்பு வேரூன்ற ஒரு சில அரசியல் கட்சிகள் அவர்களை  திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாகும். தமிழகம் PFI யின் கோட்டையாக மாறிவருகிறது. அவர்களின் கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது, தகர்த்தெறியப்படும். நாட்டில் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி உள்ளது. தீவிரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படியுங்கள்: சிவசேனா கட்சி விவகாரம்… உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!

பாஜகவினர், ஆர்எஸ்எஸ்காரர்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பாரதிய ஜனதா தொண்டர்கள் யாருக்கும் அச்சப்பட வேண்டாம். நாங்கள் சமாதான  புறாக்களை பறக்கவிடுவதில்லை, சிறுத்தைகளை விடுகிறோம். மக்களின் உரிமைகளுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். தமிழக மக்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், தற்போதைய தமிழக அரசு, காங்கிரசின் தோழமைக் கொள்கையால் பயங்கரவாதத்தை பரப்புகிறது. பீகாரிலும் இதே நிலைதான். வங்காளத்தின் நிலைமையும் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டிலிருந்து இந்தியா ஜோடோ யாத்திரையை காங்கிரஸ் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி தற்போது உடைந்து கொண்டிருக்கிறது. 

ராஜஸ்தானில் உள்ள  காங்கிரஸ் கட்சியின் நிலைமையைப் பாருங்கள். கட்சிக்குள்ளே தலைவர் பதவிக்காக போராட்டம் வெடித்துள்ளது.
ராகுல் அவர்களே, நீங்கள் இந்தியா ஜோடோ யாத்ராவை தொடங்குவதற்கு அவசியம் இல்லை. காரணம் மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜியின் வலுவான கரங்களில் நாடு பாதுகாப்பாகவும், உன்னதமாகவும் உள்ளது. உலகம் முழுவதும் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. ராகுல் அவர்களே, நீங்கள் குடும்ப ஜோடோ யாத்ரா நடத்தாதீர்கள், காங்கிரஸ் ஜோடோ யாத்ரா நடத்துங்கள்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ள முடியாது.

பாரதிய ஜனதா கட்சி ஜனநாயக வழிகளில் மக்களின் குரலை உயர்த்தி வருகிறது. தற்போதைய தமிழக அரசு அதை ஒடுக்க முயல்கிறது. அது நல்லதல்ல. மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் தலைமையில், சப்கா சாத், சப்கா விஸ்வாஸ் மற்றும் சப்கா விகாஸ் மூலம் அனைத்து மாநிலங்களின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.உணவுப் பாதுகாப்போடு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!