நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம். கர்நாடக தேர்தலை கவனியுங்கள் என பிரதமர் கூறினார். பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;- ஊழல் பட்டியலை Part4 வரை வெளியிடுவேன். வேறு வேறு கட்சிகளும் அதில் இடம்பெறும். ஊழலை எதிர்க்க ஆரம்பித்தால் ஒரு கட்சியை மட்டும் எதிர்க்க முடியாது. மொத்தமாக எதிர்க்க வேண்டும். என் மண் என் மக்கள் என்ற பாதயாத்திரை நடத்தப்படும். மண், தண்ணீர் லாரி பயத்தை எல்லாம் என்னிடம் காட்ட முடியாது. கூடுதல் பாதுகாப்பு வாங்கி வைத்துள்ளேன் என்றார்.
undefined
மேலும், அதிகபட்சம் புழல் சிறையில் சில நாட்கள் என்னை அடைத்து வைக்க முடியும். நான் தலைவராய் இருக்கும் வரை இப்படித்தான் செயல்படுவேன். யார் தயவாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் எந்த அவசியம் எனக்கில்லை. என்னை மாற்ற நினைத்தால் டெல்லிக்கு சென்று என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள். 10 தேர்தல்களில் தோற்றாலும் நான் இங்குதான் போட்டியிடுவேன்.
தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும். நான் சென்னை வரும்போது நீங்கள் வரவேண்டாம். கர்நாடக தேர்தலை கவனியுங்கள் என பிரதமர் கூறினார். பிரதமரின் சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார்.