அடுத்த வாரத்தில் மாநகராட்சி தேர்தல் அட்டவணை ரிலீஸ்…? திமுகவின் செம பிளான்…

By manimegalai aFirst Published Nov 6, 2021, 7:31 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான தேர்தல் கால அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்னை: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கான தேர்தல் கால அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பக்காவாக நடந்து முடிந்தது. சட்டசபை தேர்தல் முடிவில் திமுக எப்படி மாஸ் ஆக வெற்றி பெற்றதோ அதே போன்று ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் செம ஸ்பீடாக கள பணியாற்றி, ஜம்மென்று வெற்றி பெற்றது.

திமுகவின் இந்த வெற்றியும், அதிமுகவின் படுதோல்வியும் அரசியல் நிபுணர்களினால் வேறு ஒரு கோணத்தில் அலசப்பட்டது. சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பல தொகுதிகளில் கடும் போட்டி தந்து, 66 தொகுதிகளை தனதாக்கி கொண்டது.

வாக்கு சதவீததத்தை எடுத்துக் கொண்டால் அதிமுக கூட்டணிக்கு 33 சதவீதமும், திமுக கூட்டணிக்கு 37 சதவீதமும் பதிவானது. வெறும் 4 சதவீதம் (அதுவும் ஜெயலலிதா இல்லாமல்) வாக்கு வித்தியாசத்தில் ஹாட்ரிக் அரியணையை.. அதிமுக இழந்தது. இது பெரிய தோல்வியே கிடையாது, இபிஎஸ் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி கட்சிக்குள் பெரிதாக பேசப்பட்டது.

ஆனால் 6 மாதங்களுக்கு முன்பாக மாஸாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவின் நிலைமை உள்ளாட்சி தேர்தலில் தலைகீழாக மாறி போனது. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி. அதிமுக தலைமைக்குள் எழுந்த மோதல், கட்சிக்குள் மூத்த தலைவர்கள் ஒற்றுமையை பேணாதது, கோஷ்டி பூசல் என பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன.

இந் நிலையில் மாநகராட்சி தேர்தல் பற்றிய சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான தேர்தல் கால அட்டவணை வெளியாகி விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்து உள்ளன.

தேர்தல் எப்படி நடத்துவது என்பது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கடந்த 1ம்  தேதியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

ஒவ்வொரு மாவட்டமாக இவிஎம்களும் அனுப்பி வைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. சுப்ரிம்கோர்ட் உத்தரவுப்படி டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்ல் நடத்தியாக வேண்டும். அதில் இனி எவ்வித தாமதம் ஆகவோ, மாற்றமும் செய்ய முடியாது.

ஆகையால் அனைத்து நடவடிக்கைகளிலும் படு தீவிரம் காட்டி வருகிறது மாநில தேர்தல் ஆணையம். அனேகமாக அடுத்த வாரத்தில் தேர்தல் கால அட்டவணை வெளியாகிவிடும் என்று தெரிகிறது.

தேர்தல் நாள், வேட்பு மனு தாக்கலுக்காக தேதி, வாக்கு எண்ணிக்கை நாள் என அனைத்தும் வெளியாகி விடும் என்று கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் வாரி சுருட்டி வெற்றி பெற்ற திமுக இம்முறை விட்டுவிடக்கூடாது என்பதில் படு பிளானுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்சியின் செயல்பாடுகளில் உள்ளாட்சி தேர்தல் பலம் என்பது மிகவும் என்பதை திமுகவுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்றும், மாநகராட்சிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் திமுக செம பிளானுடன் காத்திருக்கிறது என்கின்றனர் அறிவாலயத்தை அறிந்தவர்கள். முழு பொறுப்பும் அமைச்சர்கள் கைகளில் ஒப்படைக்க இருப்பதாகவும், இம்மியளவும் பிசகாமல் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோகமாக வென்றுள்ள படு தெம்பாக இருக்கும் நிலையில் அதிமுகவின் நிலை எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. திமுகவை விட அதிமுகவின் நடவடிக்கைகளையே அனைத்து தரப்பினரும் உற்றுநோக்கி வருகின்றனர் என்று கூறலாம்…!

click me!