கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன்.. அடுத்த நொடியே அமைச்சரின் தீவிர ஆதரவாளரை தூக்கி எறிந்த திமுக.!

By vinoth kumarFirst Published Nov 6, 2021, 7:18 PM IST
Highlights

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். 

 திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவருமான பில்லா ஜெகன் மது குடித்துவிட்டு சுற்றுலா மாளிகையில் காவலரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து, திமுகவில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக அமைச்சர் ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு சொந்த தம்பியை சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இவர் கைது செய்யப்பட்டார். மேலும், இவர் மீது பல அடி தடி வழக்குகளிலும் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வளம் வந்தார்.

இதையும் படிங்க;- இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக பெட்ரோல் -டீசல் வரியை குறையுங்கள்.. ஸ்டாலினுக்கு விஜயகாந்த் நெருக்கடி.!

இந்நிலையில், தூத்துக்குடி ரோச் பூங்கா அருகில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகை உள்ளது. அங்கு உகன் சதாம் உசேன் (29) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அங்கு காரில் வந்த பில்லா ஜெகன் (44) மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்த அறை ஒதுக்குமாறு, காவலாளி கேட்டுள்ளனர். ஆனால் அவர் அறை தர முடியாது என்று கூறியதால் அவரை கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். இதில், காயமடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க;- நான் தான் ஜெயலலிதா பெத்த பொண்ணு.. விரைவில் சின்னமாவை சந்திப்பேன்.. பகீர் கிளப்பும் சென்னை பெண்..!

இதனையடுத்து, தாக்கப்பட்ட  சதாம் உசேன் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பில்லா ஜெகன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர்.  இந்நிலையில், தலைமறைவானவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று பில்லா ஜெகனை தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து யாரால் முதல்வரானார் என்பது உலகிற்கே தெரியும்.. மீண்டும் சீனாக சீனுக்கு வரும் TTV.!

இந்த விவகாரம் தலைமைக்கு தெரியவந்ததையடுத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் இருந்தும் தற்காலிகமாக பில்லா ஜெகன் நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

click me!