கார்ப்பரேட் அரசியல்..! கமல் கட்சியை கழட்டிவிட்ட செய்தியாளர்கள்.. கதறும் பிஆர்ஓ டீம்..!

By Selva KathirFirst Published Mar 2, 2020, 10:31 AM IST
Highlights

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை துவக்கினார். அந்த கட்சியின் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முக்கியமான ஏற்பாடு, தமிழக முன்னணி ஊடகங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடன் நடிகர் கமல் மதிய விருந்து சாப்பிட்டுவிட்டு கலந்துரையாடுவது என்பது தான். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சிகள் முதல் நாளிதழ்கள், வார இதழ்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கியதன் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழக முன்னணி ஊடகங்களின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களைஅழைத்து கமல் கொடுத்த விருந்து சர்ச்சையாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை துவக்கினார். அந்த கட்சியின் 3ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் முக்கியமான ஏற்பாடு, தமிழக முன்னணி ஊடகங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுடன் நடிகர் கமல் மதிய விருந்து சாப்பிட்டுவிட்டு கலந்துரையாடுவது என்பது தான். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சிகள் முதல் நாளிதழ்கள், வார இதழ்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உதாரணத்திற்கு தனியார் தொலைக்காட்சிகள் என்றால் உரிமையாளர்கள் அல்லது செய்தி ஆசிரியர்கள். நாளிதழ்கள் என்றாலும் உரிமையாளர்கள் அல்லது செய்தி ஆசிரியர்கள். பிரபலமான இணையதளம் என்றால் மேல்மட்ட நிர்வாகிகள் என செலக்டிவாக அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அழைப்பை கமலின் பீஆர்ஓ டீமான மாந்த்வி சர்மா எனும் மும்பை பெண்மணியின் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நேரடியாக சென்று தொடர்புடையவர்களுக்கு வழங்கினர். ஒரு சிலருக்கு கமல் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரன் நேரடியாக வழங்கியுள்ளார்.

இதில் விஷேசம் என்ன என்றால் வழக்கமாக ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் ஒவ்வொரு கட்சிக்கு என்று ஒவ்வொரு செய்தியாளர்களை பிரத்யேமாக வைத்திருப்பார்கள். அந்த கட்சி தொடர்புடைய அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள் அந்த செய்தியாளர்கள் வாயிலாகவே அந்த தொலைக்காட்சிகள் மற்றும் நாளிதழ்களில் வழங்கப்படும். ஆனால் 3ம் ஆண்டு கட்சி துவக்க விழாவிற்கான விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு நடைபெற்று வருவதே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களின் மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கமல் கட்சியிடம் இருந்து அழைப்பு சென்ற பிறகு தான் அந்த கட்சிக்கான செய்திகளை தொடர்ச்சியாக கொடுத்து வரும் செய்தியாளர்களுக்கே தெரியவந்தது. மேலும் சிலருக்கோ விருந்து நடைபெற இருந்த தினத்தின் காலையில் தான் தெரியவந்தது. மேலும் முக்கியமான ஊடகங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சிறிய தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்களை கண்டுகொள்ளவில்லை.

இதனால் கமல் கட்சிக்கு என்று பிரத்யேகமான செய்தியாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் பெரிய ரகளையே நடைபெற்றது. ஆனால் இது குறித்து கமல் கட்சி பிஆர்ஓ டீம் வாய் எதையும் திறக்கவில்லை. ஆனாலும் விடாத செய்தியாளர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் செய்திகளை பதிவிடும் சுஹாசினி எனும் தகல் தொழில்நுட்ப பிரிவு பெண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் செய்வது நியாயமா என கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். செய்தியாளர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவது ஏன்? உரிமையாளர்களை அழைத்ததை எங்களிடம் ஏன் கூறவில்லை? என கொந்தளித்தனர்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் சுஹாசினி தடுமாறிப் போனார். அதோடு நிகழ்ச்சி முடிந்த நிலையில் செய்தியாளர்கள் புறக்கணிப்பு காரணமாக பெரிய அளவில் இது தொடர்பான செய்திகள் எந்த தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகவில்லை. இதற்கு காரணம் உரிமையாளர்கள், தலைமை செய்தி ஆசிரியர்களுக்கு கமல் கட்சி அழைப்பு விடுத்தும் யாரும் அந்த விருந்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால் மேலிட தொடர்பும் போய் தற்போது செய்தியாளர்களின் அதிருப்திக்கும் ஆளாகி கமல் கட்சி மக்கள் தொடர்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

கமல் கார்ப்பரேட் அரசியல் செய்கிறார் இனி அவர் அறிக்கை பேட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என்றால் உரிமையாளர்களையே தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள், எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று செய்தியாளர்கள் கமலின் பிஆர்ஓ டீமுக்கு ஷாக் கொடுத்துள்ளனர்.

click me!