24 மணி நேரமும் உளவாளிகள்..! வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கூறியதன் பின்னணி..!

By Selva KathirFirst Published Mar 2, 2020, 10:25 AM IST
Highlights

வழக்கமாக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியான போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். ஜெயலலிதா மறைவுக்க பிறகு இந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா வீடு இருக்கும் இடத்தில் மட்டும் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பர். இந்த நிலையில் துக்ளக் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, பெரியாரை அவதூறாக பேசிவிட்டதாக கூறி அவருக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டம் அறிவித்தன.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வீட்டிற்கு அருகே 24 மணி நேரமும் போலீசாரை நிறுத்தி வைத்து தமிழக அரசு உளவு பார்த்தது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினி கூறியதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியான போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். ஜெயலலிதா மறைவுக்க பிறகு இந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா வீடு இருக்கும் இடத்தில் மட்டும் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பர். இந்த நிலையில் துக்ளக் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி, பெரியாரை அவதூறாக பேசிவிட்டதாக கூறி அவருக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டம் அறிவித்தன.இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஜினி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ரஜினி வீட்டிற்கு அருகே சிறிய பூத்போல அமைக்கப்பட்டு ஒரு ஷிப்டுக்கு 3 முதல் 5 பேர் என 24 மணி நேரமும் போலீசார் அங்கு நிறுத்தப்பட்டனர். தர்பார் பட விவகாரத்த்ல் விநியோகஸ்தர்கள் என்று கூறிக் கொண்டு ரஜினி வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடத்தர முயன்றவர்களை கூட இந்த போலீசார் தான் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதே போல் வழக்கமாக ரஜினி வீட்டை பார்க்க பல்வேறு நகரங்களில் இருந்து தினந்தோறும் ரசிகர்கள் வருவது வழக்கம். அவர்களையும் வீட்டிற்கு அருகே விடாமல் போலீசார் கெடுபிடி காட்டி வந்தனர்.

இந்த நிலையில் தான்திடீரென கடந்த வாரம் தனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினி சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. உடனடியாக நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினியை சந்தித்து சிஏஏ விவகாரத்தில் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பை திரும்ப பெறுவது சாத்தியம் இல்லை என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதற்கிடையே ரஜினி போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று கூறியதற்கு அவர் வீட்டிற்கு அருகே நின்று போலீசார் உளவு பார்ப்பதாக எழுந்த சந்தேகம் தான் என்கிறார்கள்.

24 மணி நேரும் அங்கிருக்கும் போலீசார் ரஜினி வீட்டிற்கு வருபவர்கள் அனைவரையும் விசாரித்து உள்ளே அனுப்பும் நிலை இருந்துள்ளது. திரையுலக தொடர்பில் வருபவர்கள், ரஜினியின்  உறவினர்கள், ரஜினி மகள் தொடர்பான விருந்தினர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினியை சந்திக்க வரும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட விவரங்களை ரஜினி வீட்டின் முன்பே நின்று கொண்டு போலீசார் சேகரித்து மேலிடத்திற்கு அனுப்பியுள்ளனர். இதனால் சில ரகசிய சந்திப்புகளை ரஜினி தனது வீட்டில் நிகழ்த்த முடியவில்லை என்கிறார்கள். கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் தனது வீட்டிற்கு வருபவர்கள் யார் என்பதை மேலிடம் தெரிந்து கொள்ள ரஜினி விரும்பாத நிலையில் தான் பாதுகாப்பு வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

click me!