ரூபாய் நோட்டு மூலம் பரவும் கொரோனா வைரஸ்..? பணத்தட்டுப்பாடு ஏற்படுமா? மக்களே உஷார்..!

By Thiraviaraj RMFirst Published Mar 17, 2020, 11:47 AM IST
Highlights

உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’மிக வேகமாக பரவுவதால் நாடு முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் ‘கொரோனா வைரஸ்’மிக வேகமாக பரவுவதால் நாடு முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்த வைரஸுக்கு 113 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பள்ளி- கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. கொரோனா வைரஸ் ஒருவர் மூலம் மற்றொருவருக்கு வேகமாக பரவுவதால் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்த்து வருகின்றனர். இருமல்- தும்மல் வரும்போது வாயை பொத்திக்கொள்ளாவிட்டால் ‘எச்சில்’மூலம் அதிகம் பரவும் ஆபத்து உள்ளது. இதையெல்லாம் தவிர்க்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை உடையது. மக்கள் தினமும் கையாளும் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயம் வழியாகவும் பரவும் அபாயம் இருப்பதாக தற்போது பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதனால் ஐக்கிய அரபு நாடுகளில் பணத்தை நேரடியாக கையாள்வதற்கு பதிலாக டிஜிட்டல் மூலம் பணபரிமாற்றத்தில் ஈடுபடுங்கள் என அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து இந்தியாவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டுகளை கையாள்வதன் மூலம் எந்த அளவுக்கு நோய் பரவும் என்பதை மதிப்பிடுவதற்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகங்கள் நிதி அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். பேருந்துகளில் நடத்துனர்கள் ரூபாய் நோட்டு- சில்லரைகளை கையாள்வது ரூபாய் நோட்டை எச்சில் தொட்டு எண்ணுவது, ஓட்டல்கள், இறைச்சி மார்க்கெட்டுகளில் ஒரே நேரத்தில் பொருட்களை கொடுத்து நாணயத்தை கையாள்வது ஆகியவற்றாலும் வைரஸ் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

எனவே டிஜிட்டல் பணபரிமாற்றம் முறையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த முடியாதவர்கள் கைகளை நன்றாக கழுவும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

click me!