ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை..!! சென்னையில் 2 இடங்களில் துவங்கியது.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2020, 1:46 PM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அனுமதி அளித்தது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’என்ற தடுப்பூசி பரிசோதனை சென்னையில் 2 இடங்களிலும் துவங்கியது. உலகத்தை முடக்கி போட்டுள்ள கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுவருகிறன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி சோதனை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரைச் சேர்ந்த சீரம் நிறுவனம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள, ‘கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசியை, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளது.கடந்த மாதம், கொரோனா தடுப்பூசியை, மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியை சீரம் நிறுவனம் பெற்றது. 

இதையடுத்து, சீரம் நிறுவனத்திற்கு மனிதர்களிடம் 2ம் மற்றும் 3ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 17 நகரங்களிலும் இந்த தடுப்பு மருந்து சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் சுமார் 1,600 பேரிடம் சோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ராமசந்திரா மருத்துவமனை ஆகியவற்றில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒரு மருத்துவமனையில் 150 பேர் என்ற அடிப்படையில் 300 பேரிடம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையில் இயக்குனர் செல்வவிநாயகம் இதன் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த சோதனையை மீண்டும் தொடங்க ஆக்ஸ்போர்ட் நிறுவனம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பரிசோதனையை தொடங்க சிரம் நிறுவனத்திற்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் இந்த தடுப்பூசி சோதனை துவங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். மேலும் இந்த பரிசோதனையில் கலந்து கொள்ளும் 300 தன்னார்வலர்கள் தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய பட்டியலுக்கும் கடந்த வாரம் மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து பரிசோதனை துவங்கியுள்ளது.
 

click me!