ஆரம்பமே அமர்களம்.. ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் கெத்து.. அதிமுக செயற்குழுவில் நிரூபித்த எடப்பாடி

By vinoth kumarFirst Published Sep 28, 2020, 1:18 PM IST
Highlights

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலும் முதல்வரை புகழ்ந்தும், பாராட்டியும் இருந்தது. இதை பார்க்கும் போது ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி உணர்த்தியுள்ளார்.

அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் பெரும்பாலும் முதல்வரை புகழ்ந்தும், பாராட்டியும் இருந்தது. இதை பார்க்கும் போது ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி உணர்த்தியுள்ளார்.

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் களை கட்டியது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிகாரப் போட்டி உச்ச கட்டத்தில் உள்ள பரபரப்பான சூழலில், அதிமுக செயற்குழு கூடியுள்ளது. இதில் இரு தரப்பினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க போட்டி போட்டியில் இறங்கி உள்ளதாகவே தெரிகிறது. இதனால் செயற்குழு நடைபெறும் ராயப்பேட்டை தலைமைக் கழகம் முன்பும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் பூ மழை மொழிந்து அவர்களது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ். தான் எம்.ஜி.ஆர்., ஜெ. படத்துக்கு முதலில் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவரை ஓரங்கட்டி இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்துக்கு முதல் நபராக மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தக் காட்சி மூலம் ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை எடப்பாடியார் உணர்த்தியிருந்தார். 

இதனையடுத்து, அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பெரும்பாலான தீர்மானங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும், பாராட்டியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும். குறிப்பாக செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வதற்கு போதிய வரவேற்பு இல்லை. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்த போது அதிமுக மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் தாம் தான் என்பதை எடப்பாடியார் உணர்த்துகிறார்.

click me!