டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கொரோனா தடுப்பூசி...!! மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்போவதாக அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 10, 2020, 5:26 PM IST
Highlights

இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதில் இந்த தடுப்பூசி 90% குரானா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. 

டிசம்பர் மாத  துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த தகவல் பிற நாடுகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக கூறிய நிலையில் அந்த  தடுப்பூசி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதுமட்டுமன்றி  பாதுகாப்பு காரணங்களால் அதை பயன்படுத்த உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்திருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 150-க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலக அளவில் 5.13 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 6.67 கோடி பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே கடுமையாக இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 85 லட்சத்து 91 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உலகமும் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எப்படியாவது இந்த வைரஸில் இருந்து மீண்டுவிட வேண்டுமென ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்புசி எதிர்நோக்கி காத்திருக்கின்றன. இந்நிலையில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் கடந்த 6 மாதத்துக்கு மேலாக மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது டிசம்பர் முதல் வாரத்தில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும், அதற்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என தங்கள் நாட்டு சுகாதாரத்துறை ஊழயர்களை அவர் எச்சரித்துள்ளார். 

அதாவது ஆக்ஸ்போர்ட் உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது. அதில் இந்த தடுப்பூசி 90% குரானா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தடுப்பூசி 90% கொரோனாவை தடுக்கிறது என்பதால், அத் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை நாட்டில் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை  செயலாளர் தெரிவித்துள்ளார்.
 

click me!