மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா..?? சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று.

Published : Apr 11, 2022, 01:48 PM IST
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா..?? சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு தொற்று.

சுருக்கம்

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வைரஸ் தொற்று  தீவிரமாகிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வைரஸ் தொற்று  தீவிரமாகிறதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.  இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுவரை மூன்று அலைகள் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளன. ஆனால் நாடு முழுவதும் வைரஸ் தொற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் வைரஸ் தொற்று என்பது படிப்படியாக குறைந்து உள்ளது. கடந்த மாதம் வரை 500க்கு மேல் இருந்த தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. மே மாதத்தில் பாதிப்பு 100க்கு கீழ் குறைந்தது. கொரோடா உயிரிழப்பும் முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் 5, 6 மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் தொற்று  இருந்து வருகிறது.

இதேபோல் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் தொற்று கணிசமாக குறைந்ததால், நோய்த் தொற்று கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஐந்து மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் டெல்லி, மிசோரம், மராட்டியம், கேரளா மாநிலங்களுக்கும் கொரோனா வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முனுப் கடிதம் எழுதியிருந்தார். தற்போது அந்த இடங்களிலும் மது கவசம் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 9 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அது 16 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று பரவியுள்ளது. எந்த பகுதியில் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது என ஆய்வு செய்ததில் அடையாறு மண்டலத்தில் இரண்டு இடங்களில் மட்டும் தொற்று அதிகரித்துள்ளது தெரிய வந்தது. திருவான்மியூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதை அடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த குடியிருப்பில் வசிக்கும் வேறு யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் அதிகமாக இருக்கிறதா என்றும் அக் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார். திடீரென ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு வைரஸ் வர காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் யார் யார் என்பது குறித்த விவரங்களை சேகரித்து அவர்களையும் கண்காணிக்கும் பணியினை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இதேபோல ராஜா அண்ணாமலைபுரத்தில் தொற்று அதிகரித்துள்ளது. அந்த இடத்திலும் சுகாதார குழுவினர், மத்திய குழுவினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்டுள்ள 6 பேருக்கும் லேசான பாதிப்பு இருப்பதால் அவர்கள் அனைவரும் வீடுகளில் தனிமைப்ப படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாத துவக்கத்தில் நான்காவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என ஐஐடி கான்பூர் மற்றும் பல்வேறு நோய் கணிப்பு அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் திடீரென வைரஸ் தொற்று அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!