முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? தேர்தல் ஆணைய உத்தரவால் கட்சியினர் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Apr 23, 2021, 4:28 PM IST
Highlights

தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை  தொடங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

தமிழகத்தில் திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை  தொடங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

இது தொடர்பாக சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அனைத்து தொகுதிகளிலும் மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். 8 மணிக்கு தபால் ஓட்டுகளும், 8:30 மணிக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும். 

ஓட்டு எண்ணிக்கைக்கான மேஜைகளை குறைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஓட்டு எண்ணும் அறை சிறியதாக இருந்தால் 2 அறைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். ஒரு அறைக்கு 7 மேஜைகள் என 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.

முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதால் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

click me!