#BREAKING மே, ஜூன் மாதங்களில் இலவசமாக 5 கிலோ உணவு தானியங்கள்.. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 23, 2021, 4:03 PM IST
Highlights

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்தாண்டு கொரோனா பரவலை அடுத்து நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் மக்கள் சொல்ல முடியா துயரம் அடைந்தனர். இதனையடுத்து குறிப்பிட்ட மாதங்களுக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியது. 

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

கொரோனா கட்டுப்பாட்டுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் மக்களுக்கு உறுதுணைபுரியும் வகையில் பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன், 80 கோடி மக்கள் பயனடையும் வகையில் ரூ.26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

click me!