விம்மி வெடிக்கும் விஜயபாஸ்கர்... ஆத்திரத்தில் அண்ணாமலை... ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அதிமுக..!

Published : Apr 23, 2021, 03:39 PM IST
விம்மி வெடிக்கும் விஜயபாஸ்கர்... ஆத்திரத்தில் அண்ணாமலை... ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அதிமுக..!

சுருக்கம்

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இவர்களை தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.   

கரூர் மாவட்டத்தில் இருக்கிற நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க.,வே போட்டியிடுகிறது. இங்கு இருக்கிற தனிப்பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு ஏட்டுகள் சிலர், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரமே செய்திருக்கிறார்கள். 

குறிப்பாக 2004ம் ஆண்டுக்கு பிறகு வேலையில் சேர்ந்த போலீசாரிடம், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வரும். அதனால் தி.மு.க.,வுக்கே ஓட்டு போடுங்கள்’என வெளிப்படையாகவே, பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். கரூர் தொகுதியில், போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகவும், அரவக்குறிச்சி தொகுதியில், பா.ஜ.க, வேட்பாளர் அண்ணாமலைக்கு எதிராகவும், இவர்கள் தீவிரமாக செயல்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களது பெயர் விபரங்களை எல்லாம், ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் சேகரித்து வைத்திருக்கிறார்கள். 

அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இவர்களை தண்ணியில்லா காட்டுக்கு தூக்கியடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி வருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். 
 
PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai Scheme: ஜூலை 15 ஆம் தேதி வரும் நல்ல சேதி.! ரூ.2,500 யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Government Scheme: ரூ.4,000 அரசு உதவித்தொகை.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?! முழு விவரம்!