மதுரையில் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் புகுந்த அந்த 2 பேர்... திமுகவினர் பீதி..!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2021, 3:14 PM IST
Highlights

அதிலும் திமுகவினருக்கு இன்னும் பி.பி. அடங்கவில்லை. மே 2ம் தேதி வரை அது குறையப்போவதும் இல்லை என்கிறார்கள்.

மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மருத்துவக் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைத்திருக்கிறார்கள். கடந்த மக்களவை தேர்தலின்போதே, இந்த மையத்துக்குள் பெண் தாசில்தார் ஒருவர் நுழைந்தது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தால் அப்போதைய மாவட்ட ஆட்சியர் நடராஜனையே இடமாற்றம் செய்து தூக்கி அடித்தனர். 

சமீபத்தில், மருத்துவக் கல்லுாரியில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்த அறை பக்கத்தில் இருவர் சென்றிருக்கிறார்கள். உடனே, தி.மு.க வேட்பாளர்கள் தளபதி, சின்னம்மாள் ஆகியோர் ஓடோடி வர, பா.ஜ.க வேட்பாளர் சரவணன், அ.தி.மு.க.,வினரோடு அங்கே வர பெரிய களேபரமாகி இருக்கிறது.  இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியருக்கு தகவலாய்ப்போய்ச்சேர, தேர்தல் அதிகாரிகள் எல்லாம் வந்து விசாரித்துள்ளனர்.

 

அந்த விசாரணையில் அங்கு வந்த இருவரும் கட்டட பராமரிப்புக்கான ஒப்பந்த ஊழியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. பிறகுதான் அனைத்துக் கட்சியினரும் நிம்மதி ஆகியிருக்கிறார்கள். ஆனாலும் சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து சங்கடம் தீரும் நேரம் வரை அதிகாரிகளுக்கு, 'பிபி' எகிறி விட்டது. அதிலும் திமுகவினருக்கு இன்னும் பி.பி. அடங்கவில்லை. மே 2ம் தேதி வரை அது குறையப்போவதும் இல்லை என்கிறார்கள்.
 

click me!