களத்தில் நிற்கும் கழகத்தினர் தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.. உ.பிக்களுக்கு ஸ்டாலின் அட்வைஸ்..

By Ezhilarasan BabuFirst Published Apr 23, 2021, 3:06 PM IST
Highlights

அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்" எனும் திட்டத்தின் கீழ் திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்கள் சென்னை எழும்பூர் திருவிக நகர் வில்லிவாக்கம் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்.

கொளத்தூர் தொகுதி உட்பட பல இடங்களில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினேன் எனவும், களப்பணியாற்றும் கழகத்தினர் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமை என்றும், நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்து மற்றவர்களுக்கும் பக்க பலமாக நிற்போம் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அச்சம் தவிர்ப்போம் அறிவியலால் வெல்வோம்" எனும் திட்டத்தின் கீழ் திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அவர்கள் சென்னை எழும்பூர் திருவிக நகர் வில்லிவாக்கம் கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார். 

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூளை, திருவிக நகர், வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  ஜி கே எம் காலனி, ஜி கே எம் காலனி 34 வது தெரு, கே.சி கார்டன், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு கிருமிநாசினி, முககவசம், சோப்பு, உள்ளிட்ட தடுப்பு பொருட்கள் மற்றும் கபசுரக் குடிநீர், தலா ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கினார்.

திமுக முதன்மைச் செயலாளர்  கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், வேட்பாளர் பரந்தாமன், திரு.வி.க சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிப் முரளி நாகராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். 

அதில், கொளத்தூர் தொகுதி உட்பட பல இடங்களில் கபசுரக் குடிநீர், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினேன், களப்பணியாற்றும் கழகத்தினர் தங்கள் நலனையும் பாதுகாத்துக் கொள்வது முதன்மையான கடமை, நமக்கு நாமே பாதுகாப்பாக இருந்து மற்றவர்களுக்கும் பக்க பலமாக நிற்போம் என கூறியுள்ளார்.  

 

click me!