அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்.. திடீர் உத்தரவால் பூத் ஏஜெண்ட்கள் பதற்றம்..!

By vinoth kumarFirst Published Apr 27, 2021, 11:22 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  வாக்கு எண்ணிக்கை  முன் 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏஜென்டுகள் கொரோனா இல்லை என்ற நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 

வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பதிவான தபால் வாக்குகளை முதலில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்ணப்படும். குலுக்கள் முறையில் ஒரு தொகுதிக்கு 5 விவிபேட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்படும். ஏப்ரல் 23ம் தேதி வரை வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

click me!