கொரோனா பரிசோதனை... அதிமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி... அதிர்ச்சியில் முதல்வர்..!

By vinoth kumarFirst Published Sep 12, 2020, 1:45 PM IST
Highlights

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தூசி மோகனுக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதி மற்றும் செய்யாறு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தூசி மோகனுக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நிறைவடைந்தது. அதற்கு பிறகு இம்மாதம் 14-ம் தேதி சட்டபேரவை மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், காவலர்கள், பாதுகாவலர்கள், பத்திரிக்கையாளர்கள், பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இந்த கொரோனா பரிசோதனை கட்டாயம் என்ற உத்தரவை சபாநாயகர் தனபால் பிறப்பித்திருந்தார். இந்த சூழலில்  நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவர்களது இல்லத்திற்கே சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். 

 

இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால், செய்யாறு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தூசி மோகனுக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

.

அதேபோல், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை கூட்டம் துவங்கும் நிலையில், 2 அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுவரை 35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

click me!